3 இந்திய மாலுமிகளைப் படுகொலை செய்த அமெரிக்கா!
11 Jun 2026, 9:18 pm

3 இந்திய மாலுமிகளைப் படுகொலை செய்த அமெரிக்கா!

மஸ்கட், ஜூன் 11 - ஓமன் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி மூன்று இந்தியர்களை படுகொலை செய்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் நாடானானது, ஹோர்முஸ் நீரிணையை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மறுபுறத்தில் ஈரான் தொடர்புடைய 8 எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா இதுவரை முடக்கியுள்ளது. மேலும் பல நேரங்களில் தாக்குதல் நடத்தி 100-க்கும் மேற்பட்ட கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இந்திய ஊழியர்களைக் கொண்ட 3 கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது.

அந்த வகையிலேயே, ஓமன் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டு இருந்த பலாவு நாட்டின் கொடி ஏற்றப்பட்ட ‘செட்டபெல்லோ’ என்ற எண் ணெய்க் கப்பல் மீதும், புதன்கிழமையன்று அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி, 3 இந்திய மாலுமிகள் படுகொலை செய்துள்ளது.

ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித் துள்ள தடையை, ‘செட்டபெல்லோ’ கப்பல் மீறிய தாலேயே தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான ‘செட்ட பெல்லோ’ கப்பலில் இருந்து வந்த அவசர அழைப் பின் அடிப்படையில் ஓமன் கடற்படை விரைந்து செயல்பட்டு, 21 இந்திய மாலுமிகளை மீட்டுள்ளது. மேலும் 3 மாலுமிகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் மூவரும் உயிரி ழந்து விட்டதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானாந்த சோனாவால் உறுதிப் படுத்தி உள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் தூதரகப் பொறுப்பாளரை நேரில் வரவழைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.