தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ. 3 ஆயிரத்து 800 லட்சம் கோடியாகஅமெரிக்காவின் கடன் உயர்வு! 10 ஆண்டுகளில் 2 மடங்கு கடன் அதிகரிப்பு

21 Aug 2026, 9:30 pm
ரூ. 3 ஆயிரத்து 800 லட்சம் கோடியாகஅமெரிக்காவின் கடன் உயர்வு! 10 ஆண்டுகளில் 2 மடங்கு கடன் அதிகரிப்பு

ரூ. 3 ஆயிரத்து 800 லட்சம் கோடியாகஅமெரிக்காவின் கடன் உயர்வு! 10 ஆண்டுகளில் 2 மடங்கு கடன் அதிகரிப்பு

வாஷிங்டன், ஆக. 21 - அமெரிக்காவின் கடன் முதல் முறையாக வரலாற்றில் இல்லாத வகையில் 3,827.6 லட்சம் கோடி ரூபாயை (40 டிரில்லியன் டாலர்) கடந்துள்ளது என அந்நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் மேலாக கடன் அதிகரித் துள்ளது.டொனால்டு டிரம்ப் 2017 ஜனவரி யில் முதன்முறை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது 190.9 லட்சம் கோடிரூபாயாக (19.95 டிரில்லியன் டாலர்) இருந்த கடன், பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் இரண்டுமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நிர்வாகங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட நிதிக் கொள்கைகளும், போர் நடவடிக்கைகளும் தொடர்ச்சியான சமநிலையின்மை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தன. கார்ப்பரேட் வரிகளை அதிகரித்து, போருக்கான செலவுகளைக்குறைப்பதன் மூலம் நிதி நிலைமையைச் சரிசெய்யாவிட்டால், அமெரிக்கா கடுமையான கடன் நெருக்கடியைச் சந்திக்கும். அது சர்வதேச அளவில் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை வைத்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தற்போது கலக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.