கோட்டையிலேயே விழுந்தது ஓட்டை! - எஸ்.பி.ராஜேந்திரன்
5 Nov 2026, 8:51 pm

கோட்டையிலேயே விழுந்தது ஓட்டை! - எஸ்.பி.ராஜேந்திரன்

“அமெரிக்கா ஒருபோதும் கம்யூ னிஸ்ட் நாடாகாது. கம்யூனிசம் புற்றுநோய் போன்றது; அதை வெட்டி எறிய

வேண்டும்” என்று கடந்த ஜூலை 4 அன்று, அமெரிக்க சுதந்திர தின விழாவில் வாஷிங்டனின் தேசிய வளாகத்தில் நின்று கொக்கரித்தார் டொனால்ட் டிரம்ப். சரியாக நான்கு மாதங்கள் கழித்து, நவம்பர் 3 அன்று நடந்த இடைக்காலத் தேர்தலில், அமெரிக்க வாக்காளர்கள் அவருக்கு இரட்டைப் பதிலடி கொடுத்துள்ளனர். டிரம்ப்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது. அதே தேர்தலில், தங்களைச் சோசலிஸ்ட்கள் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளும் அமெரிக்கஜனநாயக சோசலிஸ்ட்கள்(DSA) அமைப்பைசேர்ந்தவர்கள் வரலாறு காணாத எண்ணிக்கையில் நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றனர்.

20 ஆண்டுகளில் இல்லாத தோல்வி

ஒரு குடியரசுக் கட்சி ஜனாதிபதி, இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒரே நேரத்தில் இழப்பது 20 ஆண்டுகளில் இதுவேமுதல்முறை. 2006-இல் ஜார்ஜ் புஷ் சந்தித்த தோல்வியைவிட இது ஆழமானது என்று அல்ஜசீரா மதிப்பிடுகிறது. 100 இடங்கள் கொண்ட செனட்டில் 53 இடங்களுடன் ஆதிக்கம் செலுத்தி வந்த குடியரசுக் கட்சி, இப்போது 44 இடங்களுக்குச் சுருங்கியுள்ளது. ஜனநாயகக் கட்சி 54 இடங்களை வென்றுள்ளது. அலாஸ்கா, மிசிசிப்பி மாகாணங்களின் முடிவுகள் இழுபறியில் உள்ளன. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 228 இடங்களை வென்று,மேலும் 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. குடியரசுக் கட்சி வசமிருந்த 25 இடங்களைப் பறித்துள்ளது; குடியரசுக் கட்சியால் ஒரு இடத்தைக்கூட எதிர்த்தரப்பிடமிருந்து பறிக்க முடியவில்லை. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சித் தலைவரும்,புதிய அவைத் தலைவராக (சபாநாயகர்) பொறுப்பேற்க உள்ளவருமான ஹக்கீம் ஜெஃப்ரீஸ், தங்கள் கட்சிக்கு 255 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றுகூறியுள்ளார்.

டிரம்ப் கட்சிக் கோட்டைகளில் விரிசல்

இந்தத் தேர்தலின் அரசியல் முக்கியத்து வம் எண்ணிக்கையில் மட்டுமல்ல; தோல்வி நிகழ்ந்த இடங்களில் உள்ளது. பல பத்தாண்டுகளாகக் குடியரசுக் கட்சியின் அசைக்க முடியாத கோட்டைகளாகக் கருதப்பட்ட மாநிலங்கள் இம்முறை சரிந்துள்ளன. செனட்டில் குடியரசுக் கட்சியிடமிருந்து மைன், அயோவா, கான்சாஸ், ஓஹியோ, வட கரோலினா, தென் கரோலினா, டெக்சாஸ் ஆகிய ஏழு மாநிலங்கள்

பறிக்கப்பட்டன:டெக்சாஸில், அம்மாநில அட்டர்னி ஜெனரலும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான கென் பாக்ஸ்டனை, மாநிலச் சட்டமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் டலாரிகோ தோற்கடித்தார்; 1988-க்குப் பிறகு அந்த மாநிலத்தில் செனட் இடத்தை வென்ற முதல்ஜனநாயகக் கட்சிக்காரர் அவர். கான்சாஸில் 94 ஆண்டுகளுக்கு

பிறகு ஒரு ஜனநாயகக் கட்சி செனட்டர் தேர்வாகியுள்ளார். மைனில் 1997 முதல் செனட்டராக இருந்து வந்த குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் சூசன் காலின்ஸ் தோற்றார். ஓஹியோவில், 2024-இல் தோற்ற முன்னாள் செனட்டர் ஷெராட் பிரவுன், இம்முறைகுடியரசுக் கட்சி செனட்டர் ஜான் ஹஸ்டெட்டை வீழ்த்தி மீண்டும் செனட்டுக்குத் திரும்புகிறார்.

ஆளுநர் தேர்தல்களிலும் இதே போக்கு. ஜார்ஜியா, நெவாடா, டெக்சாஸ், ஓஹியோ, அயோவா மாநிலங்கள் ஜனநாயகக் கட்சி வசமாயின. ஜார்ஜியாவில் அட்லாண்டா நகரமுன்னாள் மேயர் கெய்ஷா லான்ஸ் பாட்டம்ஸ்,அமெரிக்க வரலாற்றில் ஆளுநராகத் தேர்வாகியுள்ள முதல் கருப்பினப் பெண்ணானார். டெக்சாஸில் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜினா ஹினோஜோசா அம்மாநிலத்தின் முதல் லத்தீன் அமெரிக்க வம்சாவளிப் பெண் ஆளுநராகிறார். நியூ மெக்சிகோவில், ஜோ பைடன் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த டெப் ஹாலண்ட், ஒரு மாநிலத்தின் ஆளுநராகும் முதல் பூர்வகுடிப்பெண்ணாகிறார். மிச்சிகனில், மருத்துவரும் டெட்ராய்ட் நகர முன்னாள் சுகாதார இயக்குநரும், பெர்னிசாண்டர்ஸின் ஆதரவு பெற்ற முற்போக்காள ருமான அப்துல் எல்-சையத், அமெரிக்க செனட்டுக்குத் தேர்வானமுதல் முஸ்லிம் ஆகிறார்.

பிரதிநிதிகள் சபையில் கலிபோர்னியா, கொலராடோ, இண்டியானா, அயோவா (மூன்று தொகுதிகளும்), கென்டக்கி, மிச்சிகன்,மிசௌரி, நெப்ராஸ்கா, நியூஜெர்சி, நியூயார்க், வட கரோலினா, பென்சில்வேனியா (மூன்று), டெக்சாஸ், வர்ஜீனியா,விஸ்கான்சின் என நாட்டின் பல பகுதிகளிலும் குடியரசுக் கட்சித் தொகுதிகள் கைமாறின. டிரம்ப் நேரடியாகஆதரவு தெரிவித்த வேட்பாளர்கள் தென் கரோலினா, வட கரோலினா, டெக்சாஸ், மிச்சிகன் ஆகிய மாநிலங்களில்தோற்றனர். டிரம்ப்புக்கு 2024-இல் வெற்றியைத் தேடித்தந்த விவசாய மாநிலங்களும் தொழில் மண்டலங்களுமேஇம்முறை அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளன என்பது கவனிக்க வேண்டிய அம்சம்.

டிரம்ப் - ஒரு தனி நபர் அல்ல

இந்தத் தோல்வியை டிரம்ப் என்ற தனிநபரின் தோல்வியாக மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரது ஆட்சியும், அவரது கட்சியும், அவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமுதலாளித்துவ, போர்வெறி, இனவெறி அரசியலும் மக்களின் தீர்ப்புக்கு உள்ளாகியுள்ளன. இரண்டாவது முறையாகஜனாதிபதியான டிரம்ப்பின் ஆட்சிக் காலம், அமெரிக்க உழைக்கும் மக்களுக்கும், உலக மக்களுக்கும் பெரும் சுமையாகவே அமைந்தது.

2026 பிப்ரவரி 28 அன்று, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் போர் தொடுத்தது. ஹோர்முஸ் நீரிணை வழியான எண்ணெய்ப் போக்குவரத்து ஏறக்குறைய முடங்கியது; உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் தடைபட்டது. போர் தொடங்கியபோது ஒரு கேலன் 2.98 டாலராக இருந்த பெட்ரோல் விலை, தேர்தல் நாளில் 4.15 டாலராக உயர்ந்தது. டீசல் விலை 67 சதவீதம் உயர்ந்து 6.29 டாலரைத் தொட்டது. இதைப் பற்றிக் கேட்டபோது, “அமெரிக்க எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் சம்பாதிக்கின்றன… நாங்கள் பெரும் லாபம் ஈட்டுகிறோம்” என்று கூறியுள்ளார் டிரம்ப்.மக்களின் துயரம் யாருடைய லாபமாக மாறியது என்பதற்கு இதைவிடத் தெளிவான வாக்குமூலம் தேவையில்லை.

வரிப் போர்: 2025 ஏப்ரலில் உலக நாடுகள்மீது 11 முதல் 50 சதவீதம் வரை இறக்குமதி வரிகளை டிரம்ப் விதித்தார். இந்தியா உட்பட பல நாடுகளின் ஏற்றுமதியாளர்களும் தொழிலா ளர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவுக்குள்ளும் இதன் சுமையை மக்களே சுமந்தனர். யேல் பல்கலைக்கழக பட்ஜெட் ஆய்வகத்தின்கணக்கின்படி, ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பத்துக்கும் சராசரியாக 1,100 டாலர் கூடுதல் செலவு ஏற்பட்டது.உரங்களின் விலை ஓராண்டில் 45 சதவீதம் உயர்ந்தது. செப்டம்பரில் பணவீக்கம் 3.7 சதவீதமாக இருந்தது; டிரம்ப்தேர்வானபோது இருந்ததைவிட இது ஒரு சதவீதப் புள்ளி அதிகம். “பதவியேற்ற முதல் நாளே மளிகைப்பொருட்களின் விலையைக் குறைப்பேன்” என்ற அவரது வாக்குறுதி காற்றில் பறந்தது.அடக்குமுறை: புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொடூரமான குடியேற்ற அமலாக்கநடவடிக்கைகள், அரசியல் எதிரிகளைக் “கம்யூனிஸ்ட்கள்” என முத்திரை குத்துதல் ஆகியவற்றையும் இந்த ஆட்சி மேற்கொண்டது. ஜூலையில் “தீவிர கம்யூனிஸ்ட்களை” நாடு கடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கும் வீடியோவை டிரம்ப் பகிர்ந்தார். அந்த வீடியோ விமர்சித்தவர்களில், 2025-இல் நியூயார்க் நகர மேயராகத் தேர்வானஇந்திய வம்சாவளி சோசலிஸ்ட் ஜோரன் மம்தானியும் அடங்குவார்.

வாக்காளர்கள் அடித்த அடி

தேர்தல் நாள் வாக்காளர் கருத்துக்கணிப்பு கள் இந்தத் தீர்ப்பின் காரணங்களைத் தெளி

வாக்குகின்றன. சிஎன்என் கணிப்பின்படி, வாக்களித்தவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் டிரம்ப்பின் செயல்பாட்டைஏற்கவில்லை. 2024-இல் அவருக்கு வாக்களித்தவர்களில் ஐந்தில் ஒருவரும் இதில் அடங்குவர். ஏறக்குறைய 90 சதவீதம் பேர் வாழ்க்கைச் செலவை முக்கியப் பிரச்சனையாகக் குறிப்பிட்டனர். பொருளாதார நிலைமோசமானதற்கு டிரம்ப்பே காரணம் என மூன்றில் இருவர் கூறினர்.அசோசியேட்டட் பிரஸ் கணிப்பின்படி, சுமார் 80 சதவீதம் பேர் விலைவாசி உயர்வால் கடுமையான அல்லது மிதமான பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பதாகக் கூறினர். ஈரான் மீதான தாக்குதல்தவறான முடிவு என சுமார் 60 சதவீதம் பேர் கருதினர். நாட்டு நலனைவிடத் தனது சொந்த நலனிலேயே டிரம்ப்அக்கறை காட்டுகிறார் என்றும் 60 சதவீதம் பேர் கருதினர்.தோல்விக்குப் பிறகும் டிரம்ப் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. ஈரான் போர் தங்கள் கட்சியைப் பாதித்தது என்பதை “பெரும்பாலும் உண்மை” என ஒப்புக்கொண்ட அவர்,“மீண்டும் அதையே செய்வேன்” என்று ஆணவத்துடன் தெரிவித்துள்ளார். “நான் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை” என்றும் கூறியுள்ளார். ஆனால் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், “நாம் தோற்றதற்குக் கார ணம் போர்தான்” என்று வெளிப்படையாக ஒப்புக்

கொண்டார். ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதும், இறக்குமதி வரிகளைத் திரும்பப் பெறுவதுமே 2027-இல் புதிய நாடாளுமன்றத்தின் முதன்மைப் பணிகள் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெஃப்ரீஸ் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் ‘சோசலிசம்’

இந்தத் தேர்தலின் மிக முக்கியமான செய்திஇதுதான்: முதலாளித்துவத்தின் தலைமைக் கோட்டையான அமெரிக்காவில், தங்களை “சோசலிஸ்ட்கள்” என்றுவெளிப்படையாக அறிவித்துக்கொள்பவர்கள் மக்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றனர். இதுவரை பிரதிநிதிகள் சபையில் “அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட்” அமைப்பின் (டிஎஸ்ஏ)உறுப்பினர்களாக இருவர் மட்டுமே இருந்தனர்: நியூயார்க்கைச் சேர்ந்த இளம் முற்போக்குத் தலைவர்அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், நாடாளுமன்றத்துக்குத் தேர்வான முதல் பாலஸ்தீன வம்சாவளிப்பெண்ணான ரஷீதா த்லைப். இருவரும் மீண்டும் வென்றுள்ளனர். அவர்களுடன் புதிதாக ஐவர் வென்றுள் ளனர்; கலிபோர்னியாவில் ஆறாவதுபுதியவரும் வென்றார். ஆக நாடாளுமன்றத் தில் சோசலிஸ்ட்களின் எண்ணிக்கை இரண்டி லிருந்து எட்டாகஉயர்ந்துள்ளது.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். டிஎஸ்ஏ(DSA) என்பது தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு சோசலிஸ்ட் அரசியல் அமைப்பு. அமெரிக்காவின் தேர்தல் முறை, ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இருபெரும் கட்சிகளுக்கே சாதகமாகக் கட்டமைக்க

ப்பட்டுள்ளது; மூன்றாவது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது ஏறக்குறைய சாத்தியமற்றது. அங்கு ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளரை, அக்கட்சி ஆதரவு வாக்காளர்கள் பங்கேற்கும் ‘பிரைமரி’எனப்படும் உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, டிஎஸ்ஏ உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு, அக்கட்சித் தலை

மையின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களையே வீழ்த்தி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தலில்நிற்கின்றனர். கட்சிக்குள்இருந்துகொண்டே, அதன் பெருமுதலாளி த்துவ ஆதரவுத் தலைமையுடன் அவர்கள் அரசியல் போராட்டம்நடத்துகின்றனர்.

இவர்களில் பலர், குடியரசுக் கட்சியினரை மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சியின் நிறுவன ஆதரவு பெற்ற, பதவியில் இருந்த உறுப்பி னர்களையே உட்கட்சித் தேர்தல்களில் வீழ்த்திவிட்டு வந்தவர்கள். டென்வரில் 29 வயதுமெலட் கிரோஸ், ஏறக்குறைய முப்பதாண்டுகளாக அத்தொகுதியின் உறுப்பினராக இருந்த டயானா டிகெட்டை உட்கட்சித் தேர்தலில் தோற்கடித்தார். டெட்ராய்ட்டில் டோனவன்மெக்கின்னி, பதவியிலிருந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் ஸ்ரீ தானேதாரை வீழ்த்தினார். லாஸ் ஏஞ்சல்ஸில் கொன்சால்ஸ்-டோரஸ், பதவியிலிருந்த ஜிம்மி கோமஸை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைப் போருக்கு எதிர்ப்பு, அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு, பெரும் பணக்காரர்கள் மீது வரி, புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவற்றை முன்வைத்தே இவர்கள் வென்றுள்ளனர்.

நாடாளுமன்றம் மட்டுமல்ல; உள்ளாட்சி அமைப்புகளிலும் சோசலிஸ்ட்கள் முன்னேறியுள்ளனர். தலைநகர் வாஷிங்டன் டி.சி.-யின் மேயராக, அந்நகர மன்ற உறுப்பினரும் ஜனநாயக சோசலிஸ்ட்டுமான ஜனீஸ் லூயிஸ் ஜார்ஜும், ரோட் தீவு மாநிலத்தின் பிராவிடன்ஸ் நகர மேயராக, மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் ஜனநாயக சோசலிஸ்ட்டுமான டேவிட் மொரேல்ஸும் தேர்வாகியுள்ளனர். இருவரும் டிஎஸ்ஏ ஆதரவுடன் போட்டியிட்டவர்கள். உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை குறைந்தது 60 இடங்களில் டிஎஸ்ஏ ஆதரவு

வேட்பாளர்கள் வென்றுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸே கணக்கிட்டுள்ளது. இறுதி முடிவுகள் வரும்போது இது 106 வரை உயரலாம். “இது டிஎஸ்ஏ-வுக்கு ஒரு சாதனை; நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாம் காணாத எண்ணிக்கை இது” என்று டிஎஸ்ஏ அமைப்பின் தேசியத் தேர்தல் குழு உறுப்பினர் சன்ப்ரீத் சிங் கூறியுள்ளார். இடதுசாரி சிந்தனை கொண்ட இயக்கம் அமெரிக்க தேசிய அரசியலில் இதுவரை கண்ட மிக வெற்றிகரமான இரவு என்று அல் ஜசீரா தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

2016-இல் தன்னை ஜனநாயக சோசலிஸ்ட் என அறிவித்துக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிட்ட மூத்த செனட்டர் பெர்னி சாண்டர்ஸின் பிரச்சாரமும், 2025-இல் நியூயார்க் மேயராக ஜோரன் மம்தானி பெற்ற வெற்றியும் இந்த எழுச்சிக்கு வித்திட்டன. டிஎஸ்ஏ உறுப்பினர் எண்ணிக்கை இன்று 1,20,000-ஐத் தாண்டியுள்ளது. மம்தானி ஆதரவளித்த அவிலா செவாலியர், கிளேர் வால்டெஸ் இருவரும் இம்முறை வென்றுள்ளனர். சோசலிசத்தை “புற்றுநோய்”

என்றும், சோசலிஸ்ட்களை “கம்யூனிஸ்ட் அச்சுறுத்தல்” என்றும் சித்தரித்து டிரம்ப்பும் குடியரசுக் கட்சியும் நடத்திய பிரச்சாரம் எடுபடவில்லை. வாழ்க்கைச் செலவு, மருத்துவம், வீட்டு வாடகை போன்ற உழைக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை முன்வைத்த சோசலிஸ்ட்களையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அறுவடை ஜனநாயகக் கட்சிக்கு ; விதை மாற்றத்துக்கு!

அதேநேரம், ஒரு கசப்பான உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டும். அமெரிக்காவின் இரு கட்சி அமைப்பில், டிரம்ப் எதிர்ப்பு அலையின் அறுவடைமுழுவதும் ஜனநாயகக் கட்சிக்கே சென்றுள்ளது. அந்தக் கட்சியும் பெருநிறுவனங்களின் நிதியுதவியிலும், வால்ஸ்ட்ரீட்டின் ஆதரவிலும் இயங்கும் கட்சியே. இராக் போர் முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆயுதம்வழங்கியது வரை, அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளில் இரு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடுஇருந்ததில்லை. மூன்றாவது கட்சி எழுவதற்கு இடமே இல்லாத அளவுக்கு அந்நாட்டின் தேர்தல் முறைகட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான், சோசலிஸ்ட்கள் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களையே களமாக்கி, அதன் நிறுவன வேட்பாளர்களை வீழ்த்தி முன்னேறி வருகின்றனர். ஜனநாயகக் கட்சியின் மிதவாதத் தலைமைக்கும் இடதுசாரிப் பிரிவுக்கும் இடையிலானமோதல்இனி மேலும் கூர்மையடையும் என்று அமெரிக்க ஊடகங்களே எழுதுகின்றன. இந்தவெற்றிகள் ஒரு நம்பிக்கையை விதைத்துள் ளன. பெருமுதலாளிகளுக்குச் சேவை செய்யும் இரு கட்சிஆதிக்கத்தை உடைத்து, உழைக்கும் மக்களுக்கான மாற்று அரசியல் ஒருநாள் அமெரிக்காவிலும் வலுப்பெறும்என்பதே அந்த நம்பிக்கை. எனினும் இது ஒரு தொடக்கமே.

உலகம் வரவேற்கிறது

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் உல கெங்கும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. “அமெரிக்கச் சமூகம்,மக்களை வறுமையில் தள்ளும் கொள்கைகளுக்கு எதிராக வாக்களித்துள்ளது; வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களித்துள்ளது” என்று ஸ்பெயினின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சித் தலைவரும் பிரதமருமான பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார். “பிரேசிலில் நடந்தது; இப்போது அமெரிக்காவில்நடந்துள்ளது; விரை

வில் ஸ்பெயினிலும் நடக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்க மக்கள் பேசிவிட்டனர்; உலக உறவுகளில் இது புதிய சகாப்தம்” என்று தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா தெரிவித்துள்ளார். அமெரிக்க வாக்காளர்கள் அளித்துள்ள “வலுவான அரசியல் சமிக்ஞை” என்று நார்வேயின்தொழிலாளர் கட்சிப் பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோரே வர்ணித்துள்ளார். “அமெரிக்கர்கள் போருக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லி விட்டனர்” என்று, ஈரான் நாடாளுமன்றத் தலைவரும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.இஸ்ரேலிலும் இதன் எதிரொலி கேட்கிறது. “அமெரிக்காவின் இரு கட்சிகளிலும் நேதன்யாகு எவ்வளவுநச்சுத்தன்மை கொண்டவராகிவிட்டார் என்பதை இது காட்டுகிறது” என்று இஸ்ரேலின் எதிர்க்கட்சியான ‘தி டெமாக்ரட்ஸ்’ கட்சித் தலைவர் யாயிர்கோலன் கூறியுள்ளார். அதேநேரம், “அமெரிக்கத் தேர்தல் அதன் உள்நாட்டு விவகாரம்” என்று சீன வெளியுறவு அமைச்சகம் அளவோடு கருத்து தெரிவித்துள்ளது. ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ரஷ்யா மீது “கடும் எதிர்மறை” அணுகுமுறை கொண்டவர்கள் என்று ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் செர்கேய் ரியாப்கோவ் எச்சரித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக்கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலானமுரண்பாடுகள் இந்தத் தேர்தலுக்குப் பிறகும் தொடரும் என்பதையே இது காட்டுகிறது.

உலக ஊடகங்களும் இதை வரலாற்று நிகழ்வாகவே பதிவு செய்துள்ளன. (ஜனநாயகக் கட்சியின் அடையாள நிறம் நீலம்; குடியரசுக் கட்சியின் நிறம் சிவப்பு.) பிரான்சின் லிபரேஷன் நாளிதழ் “நீலஅலை” என்று தலைப்பிட்டுள்ளது. பிரிட்டனின் டெய்லி மெயில் “வரலாற்றுச் சிறப்புமிக்க நீலச் சுனாமி” என்று குறிப்பிட்டுள்ளது. “டிரம்ப்புக்கு இடைக்காலச் சோகம்” என்று டைம்ஸ்ஆஃப் இந்தியா எழுதியுள்ளது. கனடாவின் டொராண்டோ ஸ்டார் “டிரம்ப்புக்குக் கண்டனம்” என்றும், மெக்சிகோ வின் எல் யூனிவர்சல் “டிரம்ப்புக்குப் பின்னடைவு” என்றும் தலைப்பிட்டுள்ளன. “ஈரான் போர் வீடு திரும்பி, வாக்குப்பெட்டியில் டிரம்ப்பைத் தாக்கியுள்ளது”என்று ஈரானின் டெஹ்ரான் டைம்ஸ் எழுதியுள்ளது. இது உக்ரைனுக்குச் சாதகமான திருப்பம் என்று கீவ்

இண்டிபெண்டன்ட் கூறியுள்ளது. மாறாக, “பிரஸ்ஸல்ஸ், தயாராக இருங்கள்; தோல்விக்குப் பிறகு டிரம்ப்பின்கோபம் ஐரோப்பா மீது பாயும்” என்று ரஷ்ய அரசு நாளிதழான ரோசிஸ்காயா கெஸட்டா எச்சரித்துள் ளது. அயோவா, கான்சாஸ், நெப்ராஸ்கா போன்ற விவசாயமாநிலங்களில் பெட்ரோல் விலை சராசரியாக 1.50 டாலர் உயர்ந்ததும், 73 சதவீத வாக்காளர்கள் பெட்ரோல் விலைவிவகாரத்தில் டிரம்ப்பின் செயல்பாட்டை ஏற்கவில்லை என்ற நியூயார்க் டைம்ஸ்-சியனா கருத்துக்கணிப்பும்இந்தத் தீர்ப்பின் பொருளாதார அடிப்படையை உறுதிப்படுத்து கின்றன.

போராட்டம் தொடரும்

இடைக்காலத் தேர்தல் தோல்வி டிரம்ப்பை அதிகாரத்திலிருந்து அகற்றிவிடவில்லை. அவர் 2029 ஜனவரி வரை ஜனாதிபதியாகத் தொடர்வார். நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களைத் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் தடுக்க முடியும் என்பதை, ‘VETO’ என்று எழுதப்பட்ட தொப்பியின் படத்தைப் பகிர்ந்து தேர்தல் முடிவு வெளியான மறுநாளே அவர் சூசகமாகஉணர்த்தியுள்ளார். ஈரான் போரும், வர்த்தகப்போரும், புலம்பெயர்ந்தோர் மீதான அடக்கு முறையும் தானாக முடிவுக்கு வந்துவிடாது.ஆனால், “தோற்கடிக்கவே முடியாது” என்று கருதப்பட்ட ‘டிரம்ப்பிசம்’ மக்களால் தோற்கடிக்கப்பட முடியும்என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. வலதுசாரி அரசியல் உலகெங்கும் தலைதூக்கியுள்ள காலத்தில், அதன்மையமான அமெரிக்காவிலேயே அது பின்னடைவைச் சந்தித்திருப்பது உலகெங்கும் உள்ள ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகளுக்கு உற்சாகம் அளிக்கிறது. வர்க்க அரசியலுக்கு அமெரிக்காவில் எதிர்காலம் இல்லை என்ற கருத்து, அமெரிக்க உழைக்கும் மக்களாலேயே தகர்க்கப்பட்டு வருகிறது. அந்தப் போராட்டம் தொடரும்; அதுவே இந்தத் தேர்தல் நமக்குச்சொல்லும் செய்தி.ஆதாரங்கள் : அசோசியேட்டட் பிரஸ் (AP), அல் ஜசீரா, சிஎன்பிசி, ஃபோர்ப்ஸ், நியூஸ்வீக், தி இண்டிபெண்டன்ட், யாகூ நியூஸ், டெமாக்ரசி நவ், நியூ ரிபப்ளிக், ஏபிசி நியூஸ் (ஆஸ்திரேலியா), என்பிஆர், க்ரான்கைட்நியூஸ்.