2 அவைகளிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றது அமெ. இடைக்காலத் தேர்தல் : டிரம்ப் கட்சி படுதோல்வி!
4 Nov 2026, 11:07 pm

2 அவைகளிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றது அமெ. இடைக்காலத் தேர்தல் : டிரம்ப் கட்சி படுதோல்வி!

வாஷிங்டன், நவ. 4 -2026-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன.இதில்ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின்இருஅவைகளிலும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில், ஜனநாயகக் கட்சி 228 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பா ன்மைக்குத் தேவையான 218 இடங்களைத் தாண்டியுள்ளது. டிரம்ப்பின் குடியரசுக்கட்சி சுமார் 139 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. செனட் சபையிலும் மொத்த முள்ள 100 இடங்களில், ஜனநாயகக் கட்சி 54 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியிடம் தற்போது 44 இடங்கள் மட்டுமே உள்ளன.

அதேபோல, ஆளுநர் தேர்தல் களில் ஜனநாயகக் கட்சி 28 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி 20 இடங் களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது.ஈரான் மீதான போரும், உலகநாடுகள் மீது அமெரிக்கா விதித்தவரிகளும் அந்நாட்டில் எரிபொருள் தொடங்கி அத்தியாவசியப் பொருள்கள் வரை அனைத்தின் விலைகளும் பல மடங்கு உயரக் காரணமாக அமைந்தன. இதன் காரணமாக, தேர்த லுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் டிரம்ப்புக்குச் சாதகமாக இருக்காது என்றே தெரிவித்து வந்தன. இதனால், குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் கூடபல நூறு கோடி ரூபாய் செலவு செய்து டிரம்ப்நேரடியாகப் பிரச்சாரம்செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட் டது. அப்படியிருந்தும், கோட்டைகளாகக் கருதப்பட்ட பல மாகாணங்களிலும் குடியரசுக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஓஹியோ, டெக்சாஸ், கன்சாஸ், ஐயோவா, மேய்ன் ஆகிய 7 மாகாணங்களில் தமது வசமிருந்த செனட் இடங்களை ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி பறி கொடுத்துள்ளது.குறிப்பாக, தெற்கு கரோலினாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு ஜனநாயகக் கட்சியின் அன்னி ஆண்ட்ரூஸ் (AnnieAndrews) வெற்றி பெற்று வரலாறு படைத் துள்ளார்.

நியூயார்க்கில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி எம்.பி. ஹக்கீம் ஜெஃப்ரீஸ் (Hakeem Jeffries), பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகப் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம்அமெரிக்க வரலாற்றில் சபாநாயகராகப் பொறுப்பேற்கும் முதல்கருப்பினத்தவர்என்ற பெருமையை அவர் பெறுகிறார்.முன்னதாக இந்த தேர்தலில், எலான் மஸ்க் போன்ற உலகப்பெருமுதலாளிகள் பல ஆயிரம்கோடி ரூபாயைக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாகச் செலவு செய்தனர். குறிப்பாக, குடியரசுக் கட்சி வேட்பாளரான கென் பாக்ஸ்டனை வெற்றி பெறச் செய்வதற்காக ரூ. 1,900கோடியை எலான் மஸ்க் செலவு செய்தார் என்று கூறப்பட்டது. எனினும், குடியரசுக் கட்சிக்கு பலத்த அடியை,அமெரிக்க மக்கள் கொடுத்துள்ளனர்.

சோசலிஸ்ட் வேட்பாளர்கள் 5 பேர் வெற்றிபெற்று சாதனை

அமெரிக்க இடைக்காலத் தேர்த லில் ‘அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள்’ (DSA) அமைப்பால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இம்முறை அதிகமான எண்ணிக்கையில் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சோசலிஸ்டுகளின் எண்ணி க்கை அதிகரித்துள்ளது.நியூயார்க் மாகாணத்தில் டாரலிசா அவிலா செவாலியே மற்றும் கிளேர் வால்டேஸ்,கொலராடோ மாகாணத்தில் மெலாட் கிரோஸ்,மிச்சிகன் மாகாணத்தில் டொனவன் மெக்கி ன்னி, பென்சில்வேனியா மாகாணத்தில் கிறிஸ்ராப் ஆகிய 5 சோசலிஸ்டுகள் வெற்றிபெற்றுள்ளனர்.

கடந்த தேர்தலில் 2 சோசலிஸ்ட்டுகள் வெற்றி பெற்றிருந்த நிலையில், மொத்தமாக சோசலிஸ்ட் பிரதிநிதிகள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் ஏஞ்சலா கொன்சலஸ் என்ற அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பின் உறுப்பினர் முன்னிலையில் உள்ளார். இவர்வெற்றி பெற்றால் ஜனநாயக சோசலிஸ்டு களின் எண்ணிக்கை 8 ஆக உயரும்.அனைவருக்கும் சுகாதார வசதி, குழந்தைப் பராமரிப்பு போன்ற சமூகப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவைக் கலைப்பது போன்ற நிலைப்பாடுகளை முன்வைத்து சோசலிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், அவர்களுக்குபெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

குறிப்பாக, பெருநிறுவனங்கள் மற்றும்இஸ்ரேல் ஆதரவு பரப்புரை அமைப்புகளி டமிருந்து நிதி பெற மாட்டோம் என்று இவர்கள் உறுதியளித்திருந்தனர்.காசா மீதான போரு க்குக் கடும் கண்டனம் தெரிவித்த இவர்கள், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.‘அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள்’ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. தற்போதுவரை பிரதிநிதிகள் சபையில் ரஷிதா த்லைப் (Rashida Tlaib) மற்றும் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria OcasioCortez - AOC) ஆகிய இருவர் மட்டுமே இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் ஜனநாயக சோசலிஸ்டாகக் கருதப்படும் எல் சயீது 52.21 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அமெரிக்க செனட்டுக்குத் தேர்வாகும் முதல் இஸ்லாமியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சோசலிசச் சிந்தனை கொண்டவர்களின் இந்த வெற்றி, அமெரிக்க அரசியலில்வளர்ந்து வரும் இடதுசாரிக் கருத்தியலின் தாக்கத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.