தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடாவடி அரசியலுக்கு விழுந்த அடி!

yesterday
அடாவடி அரசியலுக்கு விழுந்த அடி!

அடாவடி அரசியலுக்கு விழுந்த அடி!

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள், டொனால்டு டிரம்ப்பின் எல்லையற்ற அதிகார ஆட்டத்திற்கு அமெரிக்க மக்கள் கொடுத்திருக்கும் ஒரு பலத்த அடியாகும்.அதிகாரத்தின் மமதை சர்வதேச எல்லைகளைத் தாண்டும்போது, மக்களாட்சியின் குரல் உள்நாட்டு வாக்குப்பெட்டியில் எதிரொலிக்கும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கின்றன.

மக்களாட்சியின் மாண்பையும் பன்னாட்டு அமைதியையும் கேள்விக்குறியாக்கிய பல முடிவுகள் அரங்கேறின.உலக நாடுகளின் மீது தன்னிச்சையாகப் போர் தொடுப்பதும், இறையாண்மை கொண்ட நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு அங்கமாகவே மாறியது.குறிப்பாக, பாலஸ்தீனத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும்இன அழிப்புச் செயல்களுக்குப் பன்னாட்டுச் சமூகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையிலும், ஐ.நா.தீர்மானங்களைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டது உலகரங்கில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையைக் குலைத்தது.

மேலும், வெனிசுலா போன்ற ஒரு சுயாட்சி கொண்ட நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அதன் அதிபரைகடத்திச் சிறையில் அடைக்கும் அடாவடித்தனம், சர்வதேச சட்ட நெறிமுறைகளின் முகத்தில் அடித்தாற்போல்அமைந்தது.இதையெல்லாம் விடக் கொடுமை என்னவென்றால், கியூபா நாட்டின் மீது நேரிடையாகப் போர் தொடுப்பதை விடவும் கொடூரமான பொருளாதாரத் தடைகளை விதித்து, ஒரு சிறிய தீவு நாட்டின் மீதான மனிதநேயமற்ற தாக்குதலை தொடுத்து வருகிறது.இது அமெரிக்கா சர்வதேச அளவில் ஏற்படுத்திய வடுக்களில் மிக ஆழமானது.

வெளியுறவுக் கொள்கையில் மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் சர்வாதிகாரப் போக்கு தீவிரமாகத் தலைதூக்கியது.தன்னிச்சையான சுங்கவரி விதிப்புகள் மூலம் உலகளாவிய வர்த்தகப் போரை மூட்டி, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்ததும்,பல்கலைக்கழகங்களின் சுயாட்சியைக் கட்டுப்படுத்திச் சிந்தனைச் சுதந்திரத்தை முடக்க முயன்றதும் அமெரிக்க மக்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.உள்ளூர் சட்டங்களையும் அரசியலமைப்பு நெறிமுறைகளையும் தனக்கேற்ப வளைக்கப் பார்த்த அதிகார ஆட்டத்திற்கு, அமெரிக்க மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையின் மூலம் தகுந்த பதிலை அளித்திருக்கிறார்கள்.

“அதிகாரம் ஒரு நாளும் நிலையானதல்ல; அதுமக்களுக்குச் சேவை செய்வதற்கே தவிர, தனிநபரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு அல்ல”என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. டிரம்ப்பும் அவரது நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியும் போன்றவர்கள் தங்களின் அதிகாரபலத்தால் சட்டங்களையும் ஜனநாயக அமைப்புகளையும் வளைத்து நடத்தும் அரசியல் ஆட்டங்களுக்கு மக்கள் என்றாவது ஒரு நாள் முற்றுப்புள்ளிவைப்பார்கள் என்பதே உண்மை.

டிரம்ப்பின் வீழ்ச்சியும் இந்த ஜனநாயகப் பாடமும்இந்திய ஆட்சியாளர்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.சர்வாதிகாரப் போக்குடன் கூடிய அதிகார ஆட்டத்திற்கு மக்களாட்சி கொடுத்தஇந்தச் சாட்டையடி, எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு வரலாற்று எச்சரிக்கையாகவே அமையும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.