23,000 அமெரிக்கர்கள் வேலை பறிப்பு
9 Aug 2026, 12:22 am
<p><strong>23,000 அமெரிக்கர்கள் வேலை பறிப்பு </strong></p><p>அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் பல துறைகளில் வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு தொழிலாளர் புள்ளியியல் பணியகம் கூறியுள்ளது. புள்ளிவிவரங்களின் படி 23 ஆயிரம் பேர் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இக்காலத்தில் 83,000 புதிய வேலைகள் உருவாகும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில் வேலைகள் குறைந்துள்ளன. அந்நாட்டில் வேலையின்மை விகிதம் 4.1%-ஆக உள்ள நிலையில், வேலை செய்யும் அல்லது வேலை தேடும் மக்களின் பங்களிப்பு 61.4%-ஆக சரிந்துள்ளது. 2,64,000 பேர் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டதே இதற்குக் காரணமாகும். </p>
