அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை 787 ஆக உயர்வு!
3 Mar 2026, 11:57 am
<p>அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளதாக ரெட் க்ரசெண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.<br />
அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான பிரச்ச னையில் ஓமன் நாட்டின் முன்னெடுப்பில் நடை பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், எவ்வித முன் அறிவிப்புமின்றி ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ஈரான் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 168 பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவ தளபதிகள் என 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கடந்த 1-ஆம் தேதி அன்று ஈரான் அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், 4 நாட்களாக தொடரும் தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளதாக ரெட் க்ரசெண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. <br />
மேலும், நாடு முழுவதும் 153 நகரங்கள் மற்றும் 504 தளங்களை குறிவைத்து 1,039 தனித்தனி தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
</p>
