முந்தய பக்கம்

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

18 Jun 2026, 3:18 pm
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் தொடர் தாக்குதல் காரணமாக ஹோர்முஸ் நிரிணையை ஈரான் மூடியது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் பெறும் பாதிப்புக்குள்ளானது. மேலும், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது. இதனிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் நான்கு மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஜூன் 19-ஆம் தேதி அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்நாட்டு ஜனாதிபதி மேக்ரான் ஏற்பாடு செய்திருந்த விருந்தின்போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதேபோல், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஹார்முஸ் நிரிணை மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது முதல் ஈரானின் அணுசக்தித் திட்டம் வரையிலான பிரச்சினைகளை உள்ளடக்கிய 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கு இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram