ஜூன் 19-இல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து முடிவுக்கு வருகிறது அமெரிக்கா - ஈரான் யுத்தம்!
15 Jun 2026, 8:52 pm

ஜூன் 19-இல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து முடிவுக்கு வருகிறது அமெரிக்கா - ஈரான் யுத்தம்!

டெஹ்ரான்/வாஷிங்டன், ஜூன் 15 - 100 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, ஈரான் - அமெரிக்கா இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட இந்த புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தம், ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.

இந்தச் செய்தியை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஞாயிற்றுக்கிழமையன்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், முதன்முதலில் பகி ரங்கமாக அறிவித்தார். லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளி லும் ‘ராணுவ நடவடிக்கை கள் நிரந்தரமாக நிறுத்தப்படு வதற்கு’ இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.

ஈரானிய சட்டத்துறை அமைச்சர் காசிம் கரீபாபாடி, ராணுவ நட வடிக்கைகள் ‘விரைவில்’ முடிவுக்கு வரும் என்று உறுதிப்படுத்தியதுடன், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தி ற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்றார். அதற்கு முன்னதாக அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்பதை ஈரான் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

ஈரானுக்கு வெற்றி இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களுக் கான அந்நாட்டின் ஆதரவு குறித்த விவாதங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை களை ஈரான் சோதிக்கக் கூடாது எனவும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது எனவும் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் அதுதொடர்பான விஷயங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பு வெற்றியடைந்துள்ளதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோர்முஸ் நீரிணை வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்துக் கப்பல் போக்குவரத்திற்கும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்

. பதிலுக்கு ஈரான் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முடிவுக்கு வந்த ராணுவ நடவடிக்கைகள் எட்டப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரும் ராணுவ நடவடிக்கைகளும் திங்கட்கிழமை (ஜூன் 15) இரவு முதல் உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்கு வரும்.

மேலும், ஈரா னுக்கு எதிரான கடற்படை முற்றுகை உடனடியாகவும் முழுமையாகவும் முடிவுக்கு வரும். அதைத்தொடர்ந்து, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 19 அன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை மறுதரப்பு (அமெரிக்கா) நிறைவேற்றிய பின்னரே இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கு வோம் என்று கூறியுள்ள ஈரான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் அரசின் முயற்சிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

டிரம்ப் அறிவிப்பு “ஈரான் அரசுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்! ஹோர்முஸ் நீரிணையை எவ்விதக் கட்டணமுமின்றி திறக்க நான் முழு அங்கீகாரம் அளிக்கிறேன்.

அதே நேரத்தில், (ஈரான் மீதான) அமெரிக்கக் கடற்படை முற்றுகை யை உடனடியாக திரும்பப் பெறவும் உத்தரவிடுகிறேன் என டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தை அறிவித்த டிரம்ப், இந்த நடவடிக்கை பிராந்தி யம் முழுவதற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.