அமைதிப் பேச்சுவார்த்தை சீர்குலைக்க முயற்சி ஈரான் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா மீண்டும் அடாவடி!
28 Jun 2026, 12:57 am

அமைதிப் பேச்சுவார்த்தை சீர்குலைக்க முயற்சி ஈரான் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா மீண்டும் அடாவடி!

டெஹ்ரான்/வாஷிங்டன், ஜூன் 27 - அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா திடீர் ஏவு கணைத் தாக்குதல் நடத்தி யுள்ளது.

போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்துவதாக, அமெரிக்காவின் இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

கடந்த வாரம் இரு நாடு களுக்கும் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தா னது. இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வந் தன.

இந்த பேச்சுவார்த்தை யின் தொடர்ச்சியாக இந்த வாரம் மீண்டும் சுவிட்சர்லாந் தில் இரு நாட்டுப் பிரதிநிதி களும் சந்திக்க இருந்தனர். இந்நிலையில் தான் இத் தாக்குதல் சம்பவம் அரங் கேறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சென்ற ஒரு சரக் குக் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.

அதற்கு ஈரான் தான் கார ணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டிய பின்னணியில், பதி லடி எனக்கூறி ஈரானில் உள்ள ஏவுகணை மற்றும் டிரோன் சேமிப்புக் கிடங்கு கள் மற்றும் கடலோர ரேடார் மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்கு தலை நடத்தியுள்ளது.

ஈரானின் ஹோர்முஸ் கான் மாகாணத்தில் உள்ள சிரிக் (Sirik) நகரின் துறை முகப் பகுதி மற்றும் கெஷ்ம் தீவு ஆகியவற்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் ஊட கங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல், இரு நாடுகளும் கையெழுத்திட்ட ஒப்பந்தத் தின் முதல் விதியை மீறும் செயல் என்று ஈரானின் வெளி யுறவுத்துறை அமைச்ச கம் கண்டனம் தெரிவித்துள் ளது.

மேலும், இந்த ஒப்பந்தத் தின்படி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் களைக் கண்காணிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என ஈரான் கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பிற்குப் பதிலடி யாக, அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் களை நோக்கித் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரா னின் இஸ்லாமிய புரட்சி கர காவல்படை தெரி வித்துள்ளது.

அமெரிக்கத் தாக்குதல் குறித்துப் பேசிய அந்நாட் டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், “வன்முறை க்கு வன்முறையால்தான் பதில் அளிக்கப்படும்” என்று ஈரானுக்கு மிரட்டல் விடுத் துள்ளார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.