தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா - ஈரான் கையெழுத்து லெபனானில் குண்டுவீசி ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் இஸ்ரேல்!
19 Jun 2026, 9:16 pm

தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா - ஈரான் கையெழுத்து லெபனானில் குண்டுவீசி ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் இஸ்ரேல்!

டெஹ்ரான், ஜூன் 19- அமெரிக்காவும் ஈரானும் 60 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீட்டிக்கவும், புவி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையிலி ருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், ஈரானிலிருந்து அதன் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூரக் குண்டுவீச்சில் 18 பேர் பலி யாகியுள்ளனர். இது அமெரிக்கா-ஈரான் இடை யிலான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பெரு மளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் கடுமையான எச்சரிக்கை

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள சூழலில், அமெரிக்கா தனது கடமை களை எவ்வாறு பின்பற்றுகிறது என்பதை ஈரான் கண்காணிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். அமெ ரிக்கா தனது வாக்குறுதியிலிருந்து தவறினால், ஈரான் தனது கடப்பாடுகளை நிறைவேற்றாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த 60 நாள் காலப்பகுதியில் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அமெரிக்கத் தடைகளை நீக்குவது குறித்து மட்டுமே விவா திக்கப்படும் என்றும், ஈரானின் பாதுகாப்புத் திறன்கள் அல்லது ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப் படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறி னார். மேலும், செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை வெளிநாடுகளுக்கு அனுப்பப் போவதில்லை என்றும், லெபனான் உள்ளிட்ட தனது நட்பு நாடு களை ஈரான் கைவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்த நிலையில், ஏப்ரல் 8 அன்று தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தற்போது இந்த 60 நாள் நீட்டிப்பு ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது.

இவ்வொப்பந்தத்தின்படி, ஈரான் படிப்படி யாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும். அதற்குப் பதிலாக அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள தன் கடற்படையை விலக்கிக் கொள்ளும். மேலும், ஈரான் மீதான சில தடைகளைத் தளர்த்தி, முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை விடு விப்பதுடன், அதன் மறுசீரமைப்புக்காக நட்பு நாடுகள் மூலம் 300 பில்லியன் டாலர் கள் வரையிலான நிதியை வழங்கவும் அமெ ரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இருதரப்பும் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ள தால், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடை பெறவிருந்த கையெழுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

உடன்பாட்டைச் சீர்குலைக்கும் இஸ்ரேல்

இந்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், அதனை அமெ ரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியிருந்தது. ஆனால், ஒரே நாளில், இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சத்தையே சீர்குலைக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் வியாழன் ஒரே இரவில் தெற்கு லெபனான் முழுவதும் கடுமையான தாக்குதலை நடத்தி யுள்ளது.

இத்தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ள நிலையில், தங்களின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பும் அங்கு கடுமையான போர் நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த அத்துமீறிய நடவடிக்கை, தற்போது ஏற்பட்டுள்ள அமைதிப் பேச்சு வார்த்தையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது

ஈரான்-அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

அந்த நீர்வழிப்பாதையின் மையப்பகுதி யில் சுமார் 80 கண்ணிவெடிகள் வைக்கப்பட் டுள்ளதாகவும், அவற்றை அகற்றினால் தான் கப்பல் போக்குவரத்து பாதிப்பின்றி இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.