தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடர் எண்ணெய் திருட்டில் அமெரிக்கா அட்லாண்டிக் கடலில் ரஷ்யக் கப்பலையும் கடத்தியது

8 Jan 2026, 2:44 pm
தொடர் எண்ணெய் திருட்டில் அமெரிக்கா  அட்லாண்டிக் கடலில்  ரஷ்யக் கப்பலையும் கடத்தியது
<p><strong>தொடர் எண்ணெய் திருட்டில் அமெரிக்கா &nbsp;அட்லாண்டிக் கடலில் &nbsp;ரஷ்யக் கப்பலையும் கடத்தியது</strong></p> <p>வாஷிங்டன்,ஜன.8 - &nbsp; கரீபியன் கடல் பகுதியில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்க் கப்பல்களை கடத்தி எண்ணெய் திருடி வந்த அமெரிக்க ராணுவம் தற்போது &nbsp;மெரினேரா என்ற ரஷ்ய எண்ணெய்க் கப்பலை, வடக்கு அட்லாண்டிக் கடலில் &nbsp;கடத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி, வெனிசுலாவிலிருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் கொண்டு செல்ல முயன்றது எனவும் டிரம்ப்பின் உத்தர வின் பேரில் கடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு பிரிட்டன் ராணுவமும் உதவி செய்துள்ளது என அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இக்கப்பல் ஏற்கெனவே &nbsp;&lsquo;பெல்லா 1&rsquo; என்ற பெயரில் செயல்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே &nbsp;இக்கப்பலை கடத்த அமெரிக்கா முயற்சித்து வந்தது. &nbsp;அப்போது &nbsp;தப்பித்து அட்லாண்டிக் கடலுக்குள் அக்கப்பல் &nbsp;நுழைந்தது. அச்சமயத்தில் கப்பலின் பெயர் மாற்றப் பட்டு, ரஷ்யக் கொடி ஏற்றப்பட்டது என கூறப்பட்டுகிறது. மெரினேரா கப்பலைப் பிடித்த அதே நேரத்தில், கரீபியன் கடல் பகுதியில் &lsquo;சோபியா&rsquo; என்ற இன்னொரு எண்ணெய்க் கப்பலையும் அமெரிக்கா கடத்தி யுள்ளது. &nbsp;கடந்த டிசம்பர் முதல் ஜனவரி முதல் வாரம் &nbsp;முடிவதற்குள் மொத்தம் 4 கச்சா எண்ணெய்க் கப்பல்களை &nbsp;அமெரிக்கா கடத்திச் சென்றுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய &nbsp;தொடர் நடவடிக்கைகள் சர்வதேச கடல் எல்லைகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.