கியூப மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அமெரிக்காவின் கொடூர எரிசக்தி முற்றுகை:
13 Jun 2026, 9:19 pm
<p><strong>கியூப மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அமெரிக்காவின் கொடூர எரிசக்தி முற்றுகை:</strong></p><p> 96,000-க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் பாதிப்பு! ஹவானா: மனிதநேயமற்ற முறையில் கியூபா மீது அமெரிக்கா திணித்துள்ள அராஜக எரிசக்தி முற்றுகை, அந்நாட்டின் உலகப் புகழ்பெற்ற பொது சுகாதாரக் கட்டமைப்பை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. கியூபாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதால், நாட்டின் மருத்துவமனைகள் கடுமை யான மின்வெட்டையும், எரிபொருள் பற்றாக்குறையையும் சந்தித்து வருகின்றன. இதன் விளை வாக, அவசரமற்ற மற்றும் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தேசிய அளவில் சுமார் 11,193 குழந்தைகள் உட்பட 96,387 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி விநியோகம் மற்றும் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் கூட எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ளன. மருத்துவப் பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா நாடகமா டினாலும், அதன் மறைமுக வங்கித் தடைகள் காரணமாக கியூபாவால் மருத்துவ உபகரணங்க ளின் உதிரிப்பாகங்களைக் கூட வாங்க முடிவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை மீறி, ஒரு நாட்டின் சுகாதார உரிமையைப் பறிக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஏகாதிபத்தியத்தின் பாசிச முகத்தையே காட்டுகிறது.</p>
