தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடனில் ‘மூழ்குகிறது’ வளர்ச்சியின் போலி முகம்!

yesterday
கடனில் ‘மூழ்குகிறது’ வளர்ச்சியின் போலி முகம்!

கடனில் ‘மூழ்குகிறது’ வளர்ச்சியின் போலி முகம்!

உலக நாடுகளுக்குப் பொருளாதாரப் பாடம் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போலி முகம் மீண்டும் ஒருமுறை வெட்டவெளிச்சமாகி யுள்ளது. 2026 செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தநிதியாண்டில், அமெரிக்காவின் பொதுக் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சரியாக100சதவீதத்தைத் தொட்டுள்ளது. 1946-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்திற்குப் பிறகு, வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவின் கடன் விகிதம் இந்த நூறு சதவீத இரட்டை இலக்க எல்லையைத்தாண்டியுள்ளது. நாட்டின்மொத்தக் கடன் 3,360 லட்சம் கோடி ரூபாயைக்(40டிரில்லியன்) கடந்துவிட்ட நிலையில், 168 லட்சம் கோடி ரூபாய்(2 டிரில்லியன்) வருடாந்திர வரவு-செலவுத் திட்டப்பற்றாக்குறையோடும், 6.2 சதவீத பற்றாக்குறை விகிதத்தோடும் அமெரிக்க அரசு திவாலாகும் நிலையில் இயங்கிவருகிறது. முதலாளித்துவப் பொருளாதார மாதிரியின் கோரச் சீரழிவையும் அதன் உள்ளார்ந்த தீவிரமுரண்பாடுகளையும் இந்தத் தரவுகள் அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன.

உலகெங்கிலும் சட்டவிரோதப் போர்களைத்தூண்டிவிட்டு ஆயுதங்களை விற்பதும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குக் கோடிக்கணக்கில் வரிவிலக்கு அளிப்பதுமே இந்த மிகப்பெரும் கடன் நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும். கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்நாட்டின் கடன் விகிதம்வெறும் 33.7 சதவீதமாகக் குறைந்து உபரியாக இயங்கிய நிலையில், பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொடர் வரிச்சலுகைகளும், ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கான அநியாயச் செலவுகளுமே இன்றைய இக்கட்டான நிலைக்கு வழிவகுத்துள்ளன என்று, “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” ஏடே கொதித்துப் போய் எழுதியிருக்கிறது.

குறிப்பாக, சமூகப் பாதுகாப்பு நிதி வரும் 2032-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக முடங்கும்அபாயம் உருவாகியுள்ள சூழலில், உழைக்கும்மக்களின் அத்தியாவசிய நலத்திட்டங்களை நசுக்கிவிட்டுப் போர் வெறிக்கும் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். வட்டிச் செலவுகள் மட்டுமே வரவு-செலவுத் திட்டத்தின் மிகப்பெரிய சுமையாக மாறி வருவதால், வரும் பத்தாண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் அதலபாதாளத்தில் வீழும் என்றுநாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (CBO) எச்சரித்துள்ளது.

தன் சொந்த நாட்டு மக்களைக் கடனிலும், பணவீக்கத்திலும், கடுமையான வறுமையிலும் தள்ளிவிட்டு, உலக நாடுகளின் மீது மேலாதிக்கம்செலுத்தத் துடிக்கும் அமெரிக்க முதலாளித்து வத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிட்டது. அமெரிக்க டாலரின்ஏகபோக ஆதிக்கத்தை வைத்துக்கொண்டு உலகப் பொருளாதாரத்தைத் தன் கைக்குள் வைத்திருக்க நினைக்கும்அமெரிக்காவின் இந்த நச்சுச் சுழற்சி இனியும் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.