லஞ்சம், மோசடி வழக்குத் தள்ளுபடிஅதானிக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
11 Aug 2026, 8:44 pm

லஞ்சம், மோசடி வழக்குத் தள்ளுபடிஅதானிக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கஇந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,528 கோடி (265 மில்லியன் டாலர்) லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி குழுமத்தின் மீது கடந்த2024ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க முதலீட்டை பெற்றதாக பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பரான அதானி மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனை மூடிமறைக்க அமெரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடர்ந்த இந்த வழக்கில் தங்களதுகுற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், அதே சமயம் மறுக்காமலும் அதானிரூ.57 கோடி (6 மில்லியன் டாலர்), அவரது மருமகன் சாகர் அதானி ரூ.114 கோடி (12 மில்லியன் டாலர்)அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டனர். அதே போல வழக்கை விசாரிக்க அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர்(சுமார் ரூ. 83,000 கோடிக்குமேல்) முதலீடு செய்வதாகஅதானி ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் அமெரிக்காவில் ரூ. 83,000 கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக அளித்த வாக்குறுதிக்குப் பின்னர் அமெரிக்க அரசு வழக்கறிஞர், அதானிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

அரசுக்குக் கண்டனம்

இந்நிலையில், நியூயார்க் புரூக்ளின் மாவட்ட நீதிமன்றத்தில் (பெடரல் நீதிமன்றம்) அதானி லஞ்ச வழக்கு விசாரணைக்கு வந்தது. அமெரிக்க அரசு மற்றும் அதானி என இருதரப்பு வாதத்திற்குப் பின்பு புரூக்ளின் மாவட்ட நீதிபதிநிகோலஸ் கராபிஸ்,“அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் (ரூ. 83,000 கோடிக்கு மேல்) முதலீடு செய்வதாக அதானி முன்பு அளித்த வாக்குறுதிதான் இந்த வழக்கைத்திரும்பப் பெறக் காரணமா?” என கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க நீதித்துறை அதிகாரி ட்ரெண்ட் மெக் கோட்டர் ,“இது அடிப்படையில் ஒரு வெளிநாட்டு விவகாரம். இதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும்கடினம். அரசின் தற்போதைய முன்னுரிமைகளுக்கு இது பொருந்தாது. அதானியின் முதலீட்டு வாக்குறுதிக்கும்இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவர் வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதி,“அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வாளர்களைக் கலந்தாலோசிக்காமல், நீதித்துறை அதிகாரி மெக்கோட்டர் நேரடியாக அதானியின் தற்காப்பு வழக்கறிஞர்களுடன் இணைந்து இந்த முடிவை எடுத்த விதம் மிகவும் அசாதாரணமானது. இந்த வழக்கை கையாண்ட முறையில் முரண்பாடுகள் உள்ளன. எனினும்அமெரிக்க நீதித்துறை அதிகாரி ட்ரெண்ட் மெக்கோட்டரின் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். அதானி வழக்கைதள்ளுபடி செய்கிறேன்” என தீர்ப்பு வழங்கினார். அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜிமுன்னாள் சி.இ.ஓ வினீத் ஜெயின் ஆகியோரும் நியூயார்க் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.