‘செயற்கை நுண்ணறிவு பிரச்சனைகளை விவாதிக்கும்’ அமெரிக்கா - சீனா
29 Sept 2026, 9:12 pm

‘செயற்கை நுண்ணறிவு பிரச்சனைகளை விவாதிக்கும்’ அமெரிக்கா - சீனா

பெய்ஜிங், செப்.29 -அமெரிக்காவும் சீனாவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களைக் கையாள்வதற்காக ஒருவரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறையாக நேரடி பேச்சுவார்த்தைக்கான தொடர்பு அமைப்பு களை உருவாக்கஒப்புக்கொண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப்பெரிய நாடுகளாகவும் போட்டி

யாளர்களாகவும் உள்ள இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு மிக முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகின்றது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூன்று நாள் அமெரிக்கா

வுக்கு அரசு முறை பயணமாக சென்ற போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் சனிக்கிழமையன்று (செப்.26) வெளியிட்ட அறிவிப்பில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய மோசமான சம்பவங்கள்” தொடர்பாக விவாதிக்க இரு தரப்பும் ஒரு அமைப்பை நிறுவும் என்று அறிவித்தது. மேலும் இத்தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் மற்றும் நன்மைகள் குறித்தான கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு உரையாடலை’ தொடங்கும் என்றும் தெரிவித்தது. இதன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி ஜின்பிங்கின் ஒற்றுமையும், டிரம்ப்பின் பிடிவாதமும்ஏஐ தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்ட போதிலும், ஏஐ தொழில்நுட்பவளர்ச்சியைப் சீனாவுடன் இணைந்து மேற்கொள்ள முடியாது என டிரம்ப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.

இரு நாடுகளும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டிபோட்டுக்கொண்டாலும், “இன்னும் அதிகமாக இருவருக்குள்ளும் ஒத்துழைப்பை காட்ட முடியும்” இதன் மூலமாக ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளை தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இத்தொழில் நுட்பம் எப்போதுமே மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் கூறினார். மேலும் இந்த தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்பது மனிதர்களின் நலன்களை மையமாகக் கொண்ட இருதரப்பு உரையாடலாகவும் அணுகு முறையாகவும் இருக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி பல்வேறு குளறுபடிகளை உருவாக்கும் நிலையில் அத்தொழிலில் நுட்பத்தில் மிகப்பெரிய நாடுகள் என்ற வகையில் சிலக்கட்டுப் பாடுகள் அல்லது தகவல் பரிமாற்றங்களுடன் முன்னேறி செல்வது அவசியம். ஆனால் சீனாவுடன் ஏற்

பட்டுள்ள போட்டியால் எந்த இடத்திலும் ஏஐ தொழில் நுட்ப ஆராய்ச்சி வேகத்தை குறைத்து கொள்ள வேண்டாம் என அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப்உத்தரவு போட்டுள்ளார். நாங்கள் முன்னணியில் இருப்பதால், சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதில்லைஎன்று டிரம்ப் கூறியுள்ளார்.டிரம்பின் இந்தக் கருத்துக்கள், இணைந்து செயல்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளிப்படுத்தியகருத்துக்களுக்கு எதிராக உள்ளன.