தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரானின் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல்!

1 Jun 2026, 9:01 pm
ஈரானின் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல்!

ஈரானின் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல்!

டெஹ்ரான், ஜூன் 1 - ஈரானுடனான அமைதி ஒப்பந்தம், இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறி வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மறு புறத்தில், ஈரான் நாட்டின் ரேடார் தளங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார். இதனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் மீண்டும் சிக்கல் நீடிக்கிறது.

ஈரானின் தெற்குக் கடற்கரை நகரான கோருக் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு ஆகிய பகுதிகளில் இருந்த ஈரானின் ரேடார் தளங்கள், வான் பாது காப்பு அமைப்புகள் மற்றும் தரைக்கட்டுப் பாட்டு நிலையங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுகள் வீசிஅழித்துள்ளன.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, தங்களுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்திய வளைகுடா பிராந் தியத்தில் உள்ள ஒரு முக்கிய வான்படைத் தளத்தை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவுக்கு உதவி செய்யும் அண்டை நாடான குவைத் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் களைக் குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளது.

இது தவிர, ஈராக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு குர்திஷ் குழுக்களின் தளங்கள் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப் பயன்படும் எந்தவொரு நாட்டின் மீதும் பதிலடி கொடுக்கத் தங்களுக்கு முழு உரி மை உண்டு என்று ஈரான் எச்சரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.