இந்தியாவின் கனவுத் திட்டம் மீது அமெரிக்கா குண்டு வீச்சு!
9 Jul 2026, 8:52 pm
<p><strong>இந்தியாவின் கனவுத் திட்டம் மீது அமெரிக்கா குண்டு வீச்சு! </strong></p><p>டெஹ்ரான், ஜூலை 9 - இந்தியா முதலீடு செய்துள்ள ஈரானின் சபஹர் துறைமுகத்தின் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீதான போரில் இரண்டா வது முறையாக இத்துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி யுள்ளது. சபஹர் துறைமுகத் திட்டமானது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கான கனவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தைச் சார்ந்திருக்காமல், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு சபஹர் துறைமுகம் ஒரு முக்கிய வழியாக உள்ளது. எனவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சபஹர் துறைமுகம் ஒரு முக்கிய அங்கமாகும். இது சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் (International North-South Transport Corridor) ஒரு பகுதியாகும். இது இந்தியாவின் கடல் வழியுடன், ஈரான் வழியாக ரஷ்யாவையும் ஐரோப்பாவையும் இணைக்க உதவுகிறது. இந்தத் துறைமுகத்தை மேம் படுத்த இந்தியா இதுவரை 1,145 கோடி டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் தான், இந்த துறைமுகம் மீது, அமெரிக்கா மீண்டும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. சபஹர் துறைமுகம் ஷாஹித் கலந்தாரி மற்றும் ஷாஹித் பெஹஷ்டி ஆகிய இரண்டு முக்கிய முனையங் களைக் கொண்டுள்ள நிலையில், ஈரான் அரசு ஊடகங்களின் தகவல் படி, கலந்தாரி (Kalantari) துறை முகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்ட முக்கியக் கட்டமைப்புகள், சபஹர் நகரின் பல பகுதிகளிலுள்ள மின் கட்ட மைப்புகள் சேதமடைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை பாது காக்கிறோம் என கூறி இதுவரை அந்நீ ரிணைப் பகுதியைச் சுற்றி மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தற்போது ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள சபஹர் வரை தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் நீண்ட காலப் பொருளாதார மற்றும் இணைப்புத் திட்டங்களுக்கு ஒரு சிக்கலான சூழலை, அமெரிக்கா உருவாக்கியுள்ளது. எனவே, இந்தப் பிரச்சனை தொடர்பாக, ஈரான் - அமெரிக்கா ஆகிய இரு தரப்புகளிடமும் பேசி வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
