அமெரிக்காவின் புதிய மசோதாவால் இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி!
8 Aug 2026, 9:53 pm

அமெரிக்காவின் புதிய மசோதாவால் இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி!

வாஷிங்டன்/புதுதில்லி, ஆக.8-ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரை வரிவிதிக்கும் அதிகாரத்தை டிரம்பிற்கு வழங்கும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா மீது மீண்டும் புதிய வர்த்தகத் தடைகள் விதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘லிண்ட்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற இந்த மசோதாவை, 100 பேர் கொண்ட செனட் அவையில் 86 பேர் ஆதரித்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளனர். சென்ட் சபையில் நிறைவேற் றப்பட்ட இந்த அம்மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கும் நிறைவேறியவுடன், டிரம்ப் கையெழுத்திட்டு, வரி உயர்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.