தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

4 Feb 2026, 3:49 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

ஈரான் விமானம் மீது  அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்க கடற்படை ஈரானின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வகையில் மத்திய கிழக்கு கடற்பகுதியில் அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போரைத்  தவிர்ப்பதற்கான முக்கியத் தூதரகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்  இந்தச்  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு காணா பனிப்பொழிவு: ஜப்பானில் 35 பேர் உயிரிழப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு காரண மாக நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரி ழந்துள்ளதாகவும் 393 பேர் காயமடைந்துள்ள தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பனியை அகற்றும்போது ஏற்பட்ட விபத்துகள், உடல்நலக் குறைவு ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஜப்பா னின் 15 மாகாணங்கள் இந்த அதீத பனிப்பொழி வால் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் சுமார் 2 மீட்டர்உயரத்திற்குப் பனி குவிந்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில்  37,000 பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 37,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளனர். அதேபோல பாலஸ்தீன மக்களின் நிலத்தை ஆக்கிர மிக்கும் இஸ்ரேல் குடிமக்களின் வன்முறைகளின் அளவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும்  2026-ஆம் ஆண்டுக்குள் நுழையும்போது, அமைதிக்கான நேரம் மிக வேகமாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் : லெ பென் மீதான  தடையை நீட்டிக்க கோரிக்கை

பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரியும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான  லெ பென் மீதான  தடையை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் பொதுப் பதவிகளை வகிக்க 5 ஆண்டு காலத் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறி ஞர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தடை உறுதி செய்யப்பட்டால், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர் தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

புடினுக்கு  டிரம்ப் பாராட்டு

கடந்த ஒரு வாரமாக உக்ரைன் - ரஷ்யா  எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க தற்காலிக போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அரபு அமீரகத்தில் அமெரிக்கா தலைமையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், பிப்.3 ஆம் தேதியுடன் இந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவாரம் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றினார்’ என கூறியுள்ளார்.

40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகளவில் ஜனநாயகம் வீழ்ச்சி

வாஷிங்டன்,பிப்.4- கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும்  ஜனநாயகம்  வீழ்ச்சியடைந்து வருகிறது என  ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்  டொனால்டு டிரம்ப் அமெரிக்காவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.   வாஷிங்டன் நகரை தலைமை இடமாகக் கொண்ட அமெரிக்காவுக்கு ஆதரவாக இயங்கி வருகின்ற மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மனித உரிமைகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள்  குறித்துப் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:  சட்ட விதிக ளின் அடிப்படையில் இயங்கும் சர்வதேச ஒழுங்கு முறை தற்போது நசுக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப் பேற்ற  பிறகு ஒரு உலகளவில் மனித உரிமைகள் ஆபத்தான சரிவைச் சந்தித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே மனித உரிமைகளை மதிக்காமல் தொடர்ந்து அப்பட்டமான மீறல்க ளில் டிரம்ப்  ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, போதிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியிருக் கும் வெளி நாட்டினரை கைது செய்ய, முகமூடி அணிந்து கொண்டு ஆயுதம் ஏந்தி வரும்  இமிக்ரே ஷன் மற்றும் கஸ்டம்ஸ் என்போர்ஸ்மென்ட் (ICE)  குழுவினரால் நூற்றுக்கணக்கான வன் முறைகள் அரங்கேற்றப்படுகின்றன.  சர்வாதிகாரத்தை நோக்கி அமெரிக்கா இனம் மற்றும் இன ரீதியான மக்களைப் பலிகடா ஆக்குவது. அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தேசிய பாதுகாப்புப் படையினரை (National Guard) உள்நாட்டில் நிலைநிறுத்துவது. அரசியல் எதிரிகள் மற்றும் தன்னை விமர்சிக் கும் முன்னாள் அதிகாரிகள் மீது பழிவாங்கும் நட வடிக்கைகளை எடுப்பது. ஜனநாயக ரீதியான செக் அண்ட் பேலன்ஸ் (Checks and balances) முறையைச் சிதைத்து, நிர்வாக அதிகாரத்தைத் தன்னிச்சையாக விரி வாக்க முயல்வது.  இவை அனைத்தும் அமெரிக்கா சர்வாதிகா ரத்தை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகின்றன என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேசச் சட்டத்தின்படி குற்றமாகக் கருதப் படும் “கட்டாயமாக காணாமல் ஆக்குதல்” (Enforced disappearances) என்ற செயலில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது  என்பதனை  மீண்டும் ஒருமுறை அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 252 வெனிசுலா புலம்பெயர்ந்தோரை எல்சால் வடாரில் உள்ள ஒரு சிறைக்கு அனுப்பிய சம்பவத்தை இதற்கு  உதாரணமாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.