தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரான் புற்றுநோய் மருத்துவமனை மீது குண்டுவீசி அமெரிக்கா மிருகத்தனம்!

16 Jul 2026, 8:59 pm
ஈரான் புற்றுநோய் மருத்துவமனை மீது குண்டுவீசி அமெரிக்கா மிருகத்தனம்!

ஈரான் புற்றுநோய் மருத்துவமனை மீது குண்டுவீசி அமெரிக்கா மிருகத்தனம்!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதும் தாக்குதல்

டெஹ்ரான், ஜூலை 16 - ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தனது அடாவடி தாக்குதலை தீவி ரப்படுத்தியுள்ளது. ஈரானின் கடற் கரை நகரங்களைக் குறிவைத்து, வான்வழியாக குண்டு வீச்சு நடத்தி வருகிறது. அமெரிக்காவின் இலக்கில், மருத்துவமனைகளும் கூட தப்பவில்லை. ஈரானின் புற்றுநோய் மருத்து வமனையை நோக்கி அமெரிக்க ராணுவம் மிருகத்தனமான முறையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

குழந்தைகள் உட்பட 200 நோயாளிகள் பாதிப்பு

ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸ்-இல் புற்றுநோய் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான இந்த மருத்துவமனையை குறிவை த்தும் அமெரிக்க ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. நல்வாய்ப்பாக மருத்துவமனை மீது நேரடியாக அந்த குண்டு விழ வில்லை. மருத்துவமனைக்கு அரு கில் விழுந்து பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக அந்த மருத்துவமனை முழுவதுமாக மூட ப்பட்டுள்ளது 200-க்கும் அதிகமான நோயாளிகள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட 211 நோயா ளிகள் ஹீமோ தெரபி எடுத்து வந்த நிலையில், இந்த மோசமான சூழலில் அவர்கள் வேறு மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்யப் பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது ஒரு மிருகத்தன மான தாக்குதல் என ஈரான் அமெரிக்காவை கண்டித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையிலும் கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்காவிற்கும் ஈரா னுக்கும் இடையே வியாழக்கிழமை யன்று ஏற்பட்ட கடும் மோதலில், ஹோர்முஸ் நீரிணை வழியாக ஈரான் செல்லும் வழியில் இருந்த எண்ணெய் கப்பல் ஒன்றை, அமெரிக்கா ஹெல்ஃபையர் ஏவு கணைகளை வீசி தாக்கியுள்ளது. ஈரானின் கர்க் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த, ‘பெல்மா’ என்ற சரக்குக் கப்பலை அமெரி க்கப் போர் விமானம் தாக்கியுள் ளது. கப்பலின் புகைப்போக்கியின் மீது, ஹெல்ஃபையர் ஏவுகணை களை ஏவி அக்கப்பலின் பயணத்தை முடக்கியுள்ளது. இதனை அமெ ரிக்க மத்திய கட்டளை மையமே உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் கடற்கரை நகரமான பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பல இடங் களில் உள்ள அந்நாட்டின் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்திய தாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே ஈரானின் கிரேட்டர் டன்பு தீவில் இருந்த ஈரானின் கட லோர பாதுகாப்பு மற்றும் ஏவுக ணைத் தளங்களை அமெரிக்கா தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெ. ராணுவத் தளங்களை தாக்கி ஈரான் பதிலடி!

இந்நிலையில், பதிலடி நட வடிக்கையாக குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெ ரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், ஹோ ர்முஸ் நீரிணையில் அமெரிக்கா தலையிடுவதை அனுமதிக்க மாட் டோம் என்று ஈரான் எச்சரித்துள் ளது. ஈரானின் அணுசக்தி கட்ட மைப்புகளை தாக்குவேன் என டிரம்ப் மிரட்டி இருந்த நிலையில் ஈரானின் உள்கட்டமைப்புகளைத் தாக்கி னால், மேற்கு ஆசிய பிராந்தியம் முழு வதும் உள்ள அமெரிக்காவின் ராணு வத் தளங்கள் உள்ளிட்ட உள்கட்ட மைப்புகளைத் தாக்கிப் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித் துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.