தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

8 Jul 2026, 8:59 pm
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
<p><strong>ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!</strong></p><p>டெஹ்ரான், ஜூலை 8 - துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் உடனான போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்து விட்டதாக அடாவடியாக அறிவித்துள் ளார். அதேநேரத்தில், அமெரிக்க மத்திய கட்டளைப்படையும், ஈரான் நாட்டில் 80-க்கும் மேற்பட்ட இடங்களைக் குறி வைத்து குண்டுவீச்சு நடத்தியுள்ளது. பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இரக்க மின்றி குண்டு மழைகளை பொழிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பிப்ரவரி மாதம் ஈரான் உயர்த லைவர் அலி காமேனி படுகொலை செய்யப் பட்டார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வரும் வேளை யில் நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை அனு மதியின்றி கடந்த கப்பல்கள் மீது ஈரா னின் புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்கா மீண்டும் போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின், தான் தோன்றித்தனமான பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை கடந்து, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே போர்நிறுத்த உடன்பாடு அண்மையில் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தின. ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக அந்த ஒப்பந்தம் 60 நாட் களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலை யில் தான், நிரந்தரப் போர் நிறுத்தத் திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையைக் குலைக்கும் வகையில், அமெரிக்கா தாக்குதலில் இறங்கியுள்ளது. இது மீண்டும் போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் கடுமை யான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. அமைதிப் பேச்சு வார்த்தையை முறிப்பதாக டிரம்ப் பேசி இருந்தாலும் ஈரானும் அமெரிக்காவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தைகளைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.