தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைதிப் பேச்சுவார்த்தையைச் சிதைக்கும் அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் கொடூரத் தாக்குதல்; மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சம்!

26 May 2026, 9:01 pm
அமைதிப் பேச்சுவார்த்தையைச் சிதைக்கும் அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் கொடூரத் தாக்குதல்; மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சம்!

அமைதிப் பேச்சுவார்த்தையைச் சிதைக்கும் அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் கொடூரத் தாக்குதல்; மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சம்!

டெஹ்ரான், மே 26- ஈரான் - அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தையை முற்றிலுமாகச் சிதைக்கும் வகையில், தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்க ராணுவம் மீண்டும் கொடூரத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஏழு வாரங்களாக நீடித்து வந்த போர்நிறுத்த ஒப்பந்த த்தை அப்பட்டமாக மீறி அமெரிக்கா நடத்தியுள்ள இந்தத் தாக்குதலால், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

‘தற்காப்பு’ என்ற பெயரில் அமெரிக்காவின் அத்துமீறல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரை முடி வுக்குக் கொண்டு வர பாகிஸ்தான், கத் தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தி யஸ்தத்தோடு தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் புதிய கட்டப் பேச்சுவார்த்தைக்காகக் கத்தார் சென்றுள்ள சூழலிலேயே, அமெரிக்கா இந்தத் துரோகத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்றதாகக் கூறி சில படகுகள் இலக்காக்கப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகமான ‘தி கார்டியன்’ செய்தியின்படி, இந்தத் தாக்குதல்கள் ஏழு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத் திற்கு வைக்கப்பட்ட பெரும் சோதனை யாகக் கருதப்படுகிறது. உலக நாடு களின் கண்டனத்தில் இருந்து தப்புவதற் காக, இந்தத் தாக்குதலை ‘தற்காப்பு நட வடிக்கை’ என்று அமெரிக்க ராணுவம் வழக்கம் போல நியாயப்படுத்த முயன்றுள்ளது.

பண்டார் அப்பாஸ் துறைமுகம் இலக்கு

‘நியூயார்க் டைம்ஸ்’ வெளி யிட்டுள்ள செய்தியின்படி, சர்வதேசக் கடல் வர்த்தகத்தில் அதி முக்கியத்து வம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் கடற்படைத் தளத்தின் தெற்குத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) உள்ளிட்ட பகுதிகளையே அமெரிக்கா தனது தாக்குதலுக்கு முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுத்து அழிவை ஏற்படுத்தியுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற் பட்டுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், கடந்த ஏப்ரல் 8 அன்று இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த தற்காலிகப் போர்நி றுத்தம் எந்த நேரத்திலும் உடையும் அபாயகரமான சூழல் எழுந்துள்ளது.

உலகப் பொருளாதாரமும் அமெ ரிக்காவின் யுரேனியக் கொள்ளையும் தற்போது உலகப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் ஹோர்முஸ் நீரிணையில் கச்சா எண் ணெய் போக்குவரத்து தடையின்றித் துவங்கும் என்றும், அது சர்வதேச எரிபொருள் விலை உயர்வையும், உல கப் பொருளாதார நெருக்கடியையும் கணிசமாகக் குறைக்கும் என்றும் ஒட்டு மொத்த உலக நாடுகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அந்த எதிர்பா ர்ப்பைச் சிதைத்து சர்வதேசச் சூழலை அமெரிக்கா மேலும் மோசமாக்கியுள்ளது.

உண்மையில், ஈரானின் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கொள்ளையடிப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. இதனை உறு திப்படுத்தும் விதமாக, தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே அமெரிக்கத் தரப்பு, “ஈரான் தன்னிடம் உள்ள செறி வூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமை யாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்; அல்லது சர்வதேசச் சாட்சி களின் முன்னிலையில் ஈரானிலேயே அதனை அழிக்க வேண்டும்” என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக ஆணவமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் திடீர் அத்துமீறலைத் தொடர்ந்து, தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதன் உச்சத்தைத் தொட்டுள் ளது. இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைந்து ள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், அமெரிக்கக் கடற்படை அல் லது இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுக்கலாம் என்ப தால் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.