வாகன உற்பத்தி நிறுவனங்களை ஆயுதம் தயாரிக்க சொல்லும் அமெரிக்கா
19 Jun 2026, 9:15 pm

வாகன உற்பத்தி நிறுவனங்களை ஆயுதம் தயாரிக்க சொல்லும் அமெரிக்கா

வாஷிங்டன்,ஜூன் 19- உலகின் முன்னணி ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும், முக்கிய ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக இணைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஆயுத உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், மேலும் அமெ ரிக்க ராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கும் மிகப்பெரிய நிறு வனமுமாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவத்திற்காக பீரங்கிகளை தயாரித்த வரலாறு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது. எனினும் பல ஆண்டுக ளாக இது உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவே தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் வரும் ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட தனித்தனி திட்டங்களில் சுமார் 25 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.

ஆனால் இவை பெரும்பாலும் ஆயுத தயாரிப்பு சார்ந்ததாகவே இருக்கும். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கொடுக்கும் அழுத்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த கூட்டணி அமைந்துள்ளது.

ஈரானுடனான போரைத் தொடர்ந்து தங்களின் ஆயுதங்கள் மற்றும் முக்கிய போர்க்கருவிகளின் இருப்பு வேகமாக குறைந்து வருவதாக வெளி யான அறிக்கைகளைப் பென்டகன் பகிரங்கமாக மறுத்த போதிலும், நாட்டில் ஆயுத உற்பத்தித் திறனை மேம்படுத்து வதற்கான வழிகளை அது தீவிரமாகத் தேடி வருகிறது.

குறிப்பாக ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு இடைமறிப்பான்களின் (Air defense interceptors) உற் பத்தியை அதிகரிப்பதற்காக, இந்த கூட்டணி பென்டகனால் உருவாக்கப்பட்டது என்பதை இரு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

மூன்று முதல் ஏழு ஆண்டுகளில் முக்கிய போர்க்கருவிகளின் உற்பத்தி விகிதத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்குமாறு பாதுகாப்புத் துறை உற்பத்தியாளர்களை பென்டகன் வலியுறுத்தியுள்ளது.

இதேபோன்ற கூட்டணிக்காக நாட்டின் மற்றொரு பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford) நிறுவனத்தையும் மற்ற பாதுகாப்புத் துறை உற்பத்தியாளர்களுடன் இணைக்க பென்டகன் முயன்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.