தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

2 Sept 2026, 8:56 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

கொடூர நடவடிக்கைகளை தொடரும் அமெரிக்கா ஈரான் திருமண நிகழ்வில் குண்டு வீசி பொதுமக்கள் படுகொலை

டெஹ்ரான்,செப்.2-ஈரானின் சீரிக் (Sirik) மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல்நடத்தி தனது கொடூர குணத்தை மீண்டும் காட்டியுள்ளது. இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அதிகாலை இந்த “கொடுமையான” தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பகாயி தெரிவித்தார். இதில் பெண்கள்மற்றும் குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.சீரிக் மாவட்டத்தின் ஆளுநர் ரெசா ஷாஹிதியான் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 63 பேர் படுகாயமடைந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் தெரிவித்தார்.தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு சிறுவன் தான் நிகழ்விடத்திற்கு வருவதற்கு முன்பு போர் விமானங்கள் பறக்கும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறியுள்ளார்.

“நாங்கள் அங்குசென்றபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது. செங்கற்கள், கற்கள் மற்றும்சிமெண்ட்துண்டுகள் என் முகத்திலும் தலையிலும் வந்து விழுந்தன. அதில் பலரும் காயமடைந்தனர். அங்கிருந்தஅனைவரும் சாதாரண பொதுமக்கள் தான்” என்று அச்சிறுவன் கூறினான்.ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தம் ஏற்கெனவே முடிந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர்ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் ஈரானின் ராணுவதலங்கள் மீது புதிய தாக்குதல்களைஅமெரிக்கா ஆக. 31 அன்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் திருமண நிகழ்வில் அமெரிக்க ராணுவம்குண்டு வீசி பொதுமக்களை படுகொலை செய்துள்ளது.

ஈரான் பதிலடி தாக்குதல்

அமெரிக்காவின் கொடூரமான தாக்குதல்களுக்கு பதிலடியாக, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தலங்களின் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியது. ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஈராக்கின் குர்திஸ்தான்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின்புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

எபோலா : 3,000-ஐத் தாண்டிய பலி : காங்கோவில் அரசு அறிவிப்பு

காங்கோவில் எபோலா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 வரை கணக்கிடப்பட்ட தரவுகளின்படி, 6,186 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு விகிதம் 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,409 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 830 பேர் தனிமைப்படுத்தப்பட்டோ அல்லது எபோலா சிகிச்சை மையங்களிலோ சிகிச்சை பெற்று வருகின்றனர் என காங்கோ அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2,159 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் : ஆப்கன் அரசு அறிவிப்பு

கடந்த 12 மாதங்களில் 2,159 டன் அளவிலான சட்டவிரோத போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாக ஆப்கன் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் போதைப்பொருள் தடுப்புப் படையினர் 46,700 போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த பறிமுதலை செய்துள்ள அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அறிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 13,326 நபர்களை கைது செய்துள்ளதாகவும், சட்டவிரோதமாக இயங்கி வந்த 533 போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்களைத் தகர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : நிபுணர்களை அனுப்பிய சீனா

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பேரிடரை தொடர்ந்து, சீனா அந்நாட்டுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, நிவாரணப் பொருட்கள் மற்றும் டிஎன்ஏ நிபுணர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்களை டிஎன்ஏ சோதனையின் மூலமாக உறவினர்களிடம் ஒப்படைக்க இந்த நிபுணர்கள் நேபாளத்திற்கு உதவுவார்கள் என கூறப்பட்டுள்ளது. நேபாளத்தின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப டிரோன்கள், டி.என்.ஏ பரிசோதனை சாதனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள்,வெளிச்சம் தரும் விளக்குகள் போன்ற அவசியமான பொருட்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் : 8 பேர் காயம்

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் ஒடெசா பிராந்தியங்களில் புதன்கிழமை காலை வரை ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உக்ரைன் மீது சமீபத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் இந்த இரண்டு பிராந்தியங்களே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஐந்தாவது ஆண்டாக உக்ரைன்-ரஷ்ய போர் நடக்கும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.