தீக்கதிர் உலக செய்திகள்
21 Mar 2026, 2:42 pm

எரிசக்தி ‘அதிர்ச்சியைச்’ சமாளிக்கத் தவறிய அமெரிக்க நிர்வாகம்

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி அதிர்ச்சியை (Energy Shock) எதிர்கொள்ள அமெரிக்க அரசாங்கம் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விநியோகத்தை நிலைப்படுத்த எடுக்கப்படும் சில தற்காலிக முயற்சிகள் தோல்வியடையும் அபாயம் உள்ளன. சர்வதேச எரிசக்தி சந்தையில் அமெ ரிக்காவின் செல்வாக்கு சரிந்து வருவ தையே இது காட்டுகிறது. போரைத் தீவி ரப்படுத்துவதில் காட்டும் வேகத்தை, எரிசக்தி விலையைக் கட்டுப்படுத்துவதில் டிரம்ப் காட்டவில்லை என்பது பொதுமக்க ளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலட்சியப்போக்கு வரும் காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரும் தேக்க நிலையை உருவாக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

எரிவாயுச் சார்பு: நாடுகளுக்கான எச்சரிக்கை மத்திய கிழக்கில் தீவிரம டைந்துள்ள போர்

, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீதான உலக நாடுகளின் அதீத சார்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தற்போதைய சூழலில் எரிவாயுப் பயன்பாட்டிலிருந்து நாடுகள் உடன டியாக விலக முடியாது என்பது உண்மைதான் என்றாலும், அதை மட்டுமே சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எரிசக்தித் தேவைக ளுக்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருப்பது ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பையே அச்சுறுத்தும் என்பதை இந்தப் போர் உணர்த்தி யுள்ளது. எனவே, சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் போன்ற மாற்று எரிசக்தித் திட்டங்களில் நாடுகள் அதிக முதலீடு செய்ய வேண்டும். எரிசக்தித் துறையில் சுய சார்பு அடைவதே எதிர்கால நெருக்க டிகளைத் தவிர்க்க ஒரே வழி என் பதை நாடுகள் உணரத் தொடங்கி யுள்ளன.

ரஷ்யா - ஈரான் இடையிலான ராணுவக் கூட்டமைப்பு வலுப்பெறுகிறது ஈரான்

மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், ரஷ்யா ஈரானுடன் தனது உளவுத்துறை மற்றும் ராணுவ ஒத்துழைப்பைத் தீவிரமாக விரிவாக்கி வருகிறது. இப்பிராந்தியத்தில் உள்ள அமெ ரிக்கப் படைகளைக் குறிவைக்க ஈரானுக்குத் தேவையான செயற்கைக் கோள் புகைப்படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிரோன் தொழில் நுட்பங்களை ரஷ்யா வழங்கி வருவ தாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இது அமெரிக்கப் படைக ளுக்குப் புதிய பாதுகாப்பு அச்சு றுத்தலை உருவாக்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த மறைமுகத் தலை யீடு போரின் போக்கை மாற்றிய மைக்கக்கூடும் எனத் தெரிகிறது. அமெரிக்காவிற்கு எதிரான ஒரு பொதுவான கூட்டணியை ரஷ்யாவும் ஈரானும் உருவாக்கி வருகின்றன.