அதிகரிக்கும் போதை வன்முறை கலாச்சாரம் கட்டுப்படுத்த அரசு உடனடியாக விரிவான திட்டத்தை வகுக்க வலியுறுத்தல்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>அதிகரிக்கும் போதை வன்முறை கலாச்சாரம் கட்டுப்படுத்த அரசு உடனடியாக விரிவான திட்டத்தை வகுக்க வலியுறுத்தல்</strong></p>
<p>சென்னை, டிச.31 – தமிழ்நாட்டில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வன்முறை கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பதபதைக்க வைத்த திருத்தணி சம்பவம் கடந்த டிசம்பர் 27 அன்று திருத்தணி அருகே ஓடும் ரயிலில், போதையில் இருந்த நான்கு சிறார்கள் வடமாநில இளைஞர் சூரஜ் என்பவரைப் பட்டாக்கத்தியால் மிகக் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இரத்த வெள்ளத்தில் அந்த இளைஞர் கதறுவதைப் படம் பிடித்து ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்டிருப்பது, “டிஜிட்டல் போதை வன்முறை” எந்த அளவிற்கு இளைஞர்களைச் சீரழித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் “கஞ்சா 0%” என்று கூறுவதும், சபாநாயகர் “தமிழ்நாட்டில் எங்கே வளர்க்கிறார்கள்?” எனக் கேட்பதும் எதார்த்த நிலைக்கு மாறானது. கஞ்சா பிடிபடுவது ஒருபுறம் இருந்தாலும், பிடிபடாமல் புழக்கத்தில் இருக்கும் போதைப்பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. கோரிக்கைகள்: * கண்காணிப்புக் குழு: போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளிலும் அரசு நிர்வாகம், காவல்துறை, அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்-வாலிபர் அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவை அரசே அமைக்க வேண்டும். * சொத்து முடக்கம்: போதைப்பொருள் வழக்குகளில் பிடிபடுபவர்களின் சொத்துக் களை அரசு உடனடியாக முடக்கவேண்டும். * டிஜிட்டல் கண்காணிப்பு: ‘டார்க் வெப்’ (Dark Web) மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். * மறுவாழ்வு மையங்கள்: போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன அரசு மறுவாழ்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும். * இழப்பீடு: மதுரை திருமங்கலத்தில் போதை ஆசாமியால் கொல்லப்பட்ட பேருந்து நடத்துநர் குடும்பம் போன்ற, போதை வன்முறையால் பாதிக்கப்படும் அப்பாவி குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கைது செய்யப்படுபவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் 21 வயதிற்குட் ட்பட்ட இளைஞர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வெறும் ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற பெயரளவிலான நடவடிக்கைகள் இன்றி, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சா மற்றும் சிந்தெடிக் டிரக்ஸ் புழக்கத்தை வேரோடு அழிக்கத் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p>
