சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை விரைந்து இயற்றிடுக
10 Feb 2026, 4:50 pm

சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை விரைந்து இயற்றிடுக

வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல்

சேலம், பிப்.10- பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண் டும் என வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பி னர் செவ்வாயன்று மறியலில் ஈடு பட்டனர். “சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை” உடனே இயற்ற வேண் டும். அனைத்து நிலை அலுவலர்க ளுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதி யம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதம் பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். டேப்ஸ் திட்டத் தில் கிராம உதவியாளர்கள் முழு மையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வருவாய்த்துறை அலுவலர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் செவ்வாயன்று மறியல் நடை பெற்றது. சேலம் கோட்டை மைதா னத்தில் நடைபெற்ற மறியலில் ஈடு பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் 250க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு, வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த் தனாரி தலைமை வகித்தார். இதில் வருவாய்த்துறை ஊழியர் சங்கங் களின் ஒருங்கிணைப்பாளர்கள் அருள் பிரகாஷ், மாரியப்பன், மணி வேல், இளங்கோவன், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறி யலுக்கு, கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் சி.துரைவேல் தலை மை வகித்தார். இதில் வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சிவன், கூட்டமைப்பின் நிதி காப்பாளர் பகவதி, கிராம நிர் வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் அகிலன் அமிர்தராஜ், மாவட்டத் தலைவர் கணேசன், பிரச்சாரச் செயலாளர் கதிரவன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாவட்டச் செயலாளர் பிரபு, கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவசங்கர், மாவட்டச் செயலாளர் ரங்கன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அனைவரையும் காவல் துறையி னர் கைது செய்தனர். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவல கம் அருகே நடைபெற்ற மறிய லுக்கு, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய், நில அளவை ஒன்றிப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌரிசங்கர், கிராம நிர்வாக அலு வலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப் பாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் சங்க ஒருங்கிணைப்பா ளர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொறுப்பாளர் கு.குமரே சன், நில அளவைத்துறை சங்க நிர் வா சக்திவேல், கிராம நிர்வாக அலு வலர் சங்க பொறுப்பாளர் பழனி சாமி உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர். கோவை கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியலுக்கு ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப் பாளர் சையது உசேன் தலைமை வகித்தார். இதில், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலா ளர் கமலஹாசன், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஜோதி பிர காஷ், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் குமார், நில அளவைத்துறை ஒன்றிப்பின் நிம லன் கிறிஸ்டோபர், கிராம உதவியா ளர் சங்கத்தின் சரவணகுமார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செய லாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறி யலுக்கு கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர்கள் ஆனந்தன், லட் சுமி நரசிம்மன், பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையி னர் கைது செய்தனர்.