தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்திடுக!

15 Mar 2026, 4:11 pm
வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்திடுக!
<p><strong>வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்திடுக!</strong></p> <p>தூத்துக்குடி, மார்ச் 15 - வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை &nbsp;எஸ்.பி.யிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் நேரில் மனு அளித்து வலி யுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் &nbsp;பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பிளஸ்&ndash;2 &nbsp;மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா, மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, மாநில துணைச் செயலாளர் பூமயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் குளத்தூர் &nbsp;அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பிளஸ்&ndash;2 மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் &nbsp;கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் மாணவி மீது நடை பெற்ற இந்த மனிதத் தன்மையற்ற குற்றச் &nbsp;சம்பவம் பெண்கள் மற்றும் பெண் குழந்தை களின் பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை &nbsp;எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஐந்து நாட்கள் &nbsp;கடந்தும் இதுவரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டறியப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இத்தகைய கொடூரக் குற்றத்தில் ஈடு பட்ட குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படா தது பொது மக்களிடையே சட்டம்-ஒழுங்கு மற்றும் &nbsp;பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவி காணாமல் போனபோது குடும் பத்தினர் காவல் நிலையத்தை அணுகியபோதும் உடனடியாக புகார் பதிவு செய்யாமல் காவல்துறை யினர் அலைக்கழித்ததாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர் பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி களை விரைந்து கைது செய்ய வேண்டும். மாணவி &nbsp;காணாமல் போனபோது புகார் பதிவு செய்யாமல் &nbsp;அலட்சியம் காட்டிய காவல்துறை அதிகாரிகள் மீது &nbsp;வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி &nbsp;செய்வது அரசும் காவல்துறையும் கொண்டுள்ள அடிப்படை பொறுப்பு. இந்தக் கொடூரச் சம்பவத்தில் &nbsp;குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாது காப்பு, சட்ட உதவி மற்றும் உளவியல் ஆலோ சனையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் &nbsp;கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. &nbsp;மனு கொடுக்கும்போது, தூத்துக்குடி மாவட்டத் &nbsp;தலைவர் கமலம், மாவட்டச் செயலாளர் ஜானகி &nbsp;ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.