உகுனியம், நகலூருக்கு பேருந்து விட வலியுறுத்தல்
14 Dec 2025, 3:45 pm
<p><strong>உகுனியம், நகலூருக்கு பேருந்து விட வலியுறுத்தல்</strong></p>
<p>ஈரோடு, டிச.14- கடம்பூர் மலைப்பகுதிக்குட்பட்ட உகுனி யம் மற்றும் நகலூர் பகுதிக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டுமென வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை வட்டாரக்கமிட்டி மாநாடு கடம்பூரில், தலைவர் பசவராஜ் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், துணைத்தலைவர் ஷ்யாம் பிரவீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், கடம்பூர் மலையிலிருந்து 7 கிமீ தொலைவில் உகுனி யம் என்ற மலை கிராமம் உள்ளது. இது யானை உள்ளிட்ட விலங்குகள் நிறைந்த பகுதியாகும். இங்கு முறையான சாலை வசதி இல்லை. எனவே, போக்குவரத்து வசதியும் இல்லை. சுமார் 100 குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதிக்கு சாலை அமைத்து பேருந்து அல்லது சிற்றுந்து வசதி கொடுக்க வேண்டும். மேலும், சாலை அமைக்கப்பட்டுள்ள நகலூர் பகுதிக்கும் அரசு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சங்கத்தின் கமிட்டித் தலைவராக பசவராஜ், செயலாளராக லெனின், பொருளாள ராக சஞ்சீவ் உள்ளிட்ட 13 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.</p>
