நொரம்பு மண் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்
18 Nov 2025, 3:21 pm
<p><strong>நொரம்பு மண் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, நவ.18- பாலக்கோடு பகுதியில் அனுமதி யின்றி கடத்தப்படும் நொரம்பு மண் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு பகுதிகளில் ரியல் எஸ்டேட், குடி யிருப்பு, வணிக வளாக கட்டிடங்க ளுக்கு தேவையான கிராவல் மண், நொரம்பு, உளிகற்கள், பாறாங்கற்கள் ஆகியவை அனுமதியின்றி சட்டவிரோ தமாக இரவு நேரங்களில் கடத்தப்படு கின்றன. வனப்பகுதியிலுள்ள உள்ள குன்றுகள், மலைகள், பொதுபணித் துறை ஏரிகள் மற்றும் ஊராட்சி ஏரி களில் இருந்து இரவு நேரங்களில் டிப்பர் லாரி டிராக்டரில் நொரம்பு மண் கடத் தல் நடந்து வருவதாக விவசாயிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ள னர். இயற்கை வளங்கள் அழிவதுடன் மலைகளை குடைவதால் மரங்களும் அழிக்கப்படுகின்றன. இதனால் நிலத் தடி நீர் மட்டம் வேகமாக குறைவது டன், மழையின்றி வருங்காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ் சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள எர்ரண அள்ளி ஊராட்சி, பெருமாள் கோவில் பள்ளம் பகுதியில் ஒரு மலையே காணா மல் போயுள்ளது. இச்சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் கனிம வள கொள்ளையர்களை மாவட்ட நிர் வாகம் தடுக்க வேண்டும் என பொது மக்களும், விவசாயிகளும் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
