மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்க வலியுறுத்தல்
30 Dec 2025, 5:57 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்க வலியுறுத்தல்</strong></p>
<p>உடுமலை, டிச.30- தமிழக அரசு ரேசன்கடைகளில் மாதம் 35 கிலோ அரிசி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தினர் செவ்வாயன்று மனு அளித்தனர். உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அலுவல கத்தில் கோட்டாச்சியர் குமார் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப் போது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் தரப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது, மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசிடம் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி தரப்பட்ட மனு மீது உரிய விசா ரணை செய்து விரைவாக மனைபட்டா வழங்க வேண் டும். மாற்றுத்திறனாளிகள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரேசன்கடைகள் மூலம் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். மேலும் மாற்றுத்திற னாளிகள் என்ற அட்டை வாங்கவும் பரிசோதனை செய் யவும் திருப்பூர் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அதிக சிரமம் ஏற்படுகிறது. இதனால் உடுமலை அரசு மருத்துவமணையில் பரிசோதனை செய்து அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக் கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் உடுமலை தாலூகா செயலாளர் பால சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் குருசாமி, கண்ண யன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
