தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பண்டைய மக்களின் வாழ்வியல் முறையை சொல்லும் பாறை ஓவியங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

1 Feb 2026, 3:51 pm
பண்டைய மக்களின் வாழ்வியல் முறையை சொல்லும் பாறை ஓவியங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
<p><strong>பண்டைய மக்களின் வாழ்வியல் முறையை சொல்லும் பாறை ஓவியங்களை பாதுகாக்க வலியுறுத்தல்</strong></p> <p>உடுமலை, பிப்.1- ஜம்புக்கல் மலையில் இயற்கை &nbsp;வளங்களை சுரண்டப்படும் நிலை யில், அந்த மலையின் அருகே உள்ள பாறை ஓவியங்களை பாது காக்க வேண்டும் என்ற கோரிக்கை &nbsp;எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூகா, கல்லாபுரம் அருகே உள்ள மதகடிப்புதூர் மலையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரமாக, மலைப்பகுதியில் மக்கள் வாழ்வியலை விளக்கும் வகையில் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உள்ளது. இங்குள்ள ஓவியங்களில் பண்டைய கால மனி தர்கள் மலைக்குகைகளில் இனக் குழுவாக வசித்து வந்தற்கான சான்றுகளும், சைகை குறியீடுகள் மூலம் தங்களின் மகிழ்ச்சி, சோகம் மற்றும் வீரத்தை உணர்த்தும் வகையில் ஓவியங்கள் உள்ளன. &nbsp;மேலும், ஆண்கள், பெண்கள் மற் றும் குழந்தைகள் ஒற்றுமையாக மகிழ்ச்சியை வெளிபடுத்தும் நட னம், வேட்டை முறை, சிங்கம், புலி &nbsp;உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற் பட்ட ஆபத்துக்களை குறியீடுகள் மூலம் எச்சரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன. கற்கால இறுதி யில் மக்கள் ஒரே இடத்தில் வசிக்க &nbsp;துவங்கிய குழி வீடுகளும், பெரிய &nbsp;அளவிலான கை அச்சு ஒன்றும் &nbsp;காணப்படுகிறது. இந்த ஓவியங்கள் &nbsp;சுமார் 3000 ஆண்டுகள் பழமையான தாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இவ்வகை ஓவியங்கள் உள்ள பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண் டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலை யில், பாறை ஓவியங்கள் இருக்கும் &nbsp;மலை அருகே உள்ள ஜம்புக்கல் மலைப் பகுதியில் இயற்கை வளங் களை அழிக்கும் நடவடிக்கை நடை பெற்று வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மதகடிப்புதூர் பாறை ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத் தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.