தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

2 Feb 2026, 4:51 pm
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
<p><strong>ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, பிப்.2- ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பரி சல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு &nbsp;வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய தொழிற்சங்க &nbsp;மையத்தின் தருமபுரி மாவட்டச் செயலா ளர் சி.நாகராசன் வெளியிட்டுள்ள அறிக் கையில், ஒகேனக்கல் தென்னிந்தியா வின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இப்பகுதியை மேம் படுத்தி, இந்த சுற்றுலாத் தலத்தை நம்பி யுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட &nbsp;தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பென்னாகரம் வட்டார &nbsp;வளர்ச்சி அலுவலரும், மாவட்ட நிர்வாக மும் தலையிட்டு அவர்களுடைய அடிப் படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க &nbsp;வேண்டும். குறிப்பாக, இங்கிருந்து வரக் கூடிய வருவாயின் பெரும்பகுதியை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவது, சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, பரி சல் ஓட்டக்கூடிய தொழிலாளர்கள், சமையல் செய்யும் பெண் தொழிலா ளர்களுடைய குறைகளை போக்க வேண்டும். மாற்று பரிகார நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும், பரிசல் இயக்கும் தொழிலா ளர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுக்கு இரண்டு செட் நீல நிற மேல் சட்டை வழங்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பழுதாகியுள்ளது. அதை &nbsp;சரிப்படுத்தி தர வேண்டும். பரிசல் ஓட்டி களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் &nbsp;தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடத்தை சுகாதாரத்துடன் பரா மரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் &nbsp;பரிசல் பயணம் செய்யும்போது, அவர் களுக்கு வழங்கப்படுகிற (லைப் ஜாக்கெட்) உயிர்காக்கும் சீருடையை சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். &nbsp;வயது முதிர்ந்த பரிசல் ஓட்டிகளின் குடும்ப வாரிசுகளுக்கு, பரிசல் இயக் கும் உரிமம் வழங்க வேண்டும். மழை &nbsp;வரும்போது சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்காக, பரிசல் தளத்தில் மேல் கூரை அமைத்து தர வேண்டும். சமையல் செய்யும் பெண்களுக்கு குடி நீர் மற்றும் பயணிகள் அமர்ந்து உணவு &nbsp;உட்கொள்வதற்கான இட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.