தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வலியுறுத்தல்

27 Feb 2026, 5:32 pm
வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வலியுறுத்தல்
<p><strong>வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, பிப்.27- தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால் உணவு மற்றும் தண் ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறி வரும் நிலையில், வனப்பகுதிக்குள் தண் ணீர் தொட்டிகள் அமைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. கர்நாடகா, ஆந்திர மாநில வனப் பகுதிகளில் வறட்சி நிலவும்போது, யானைகள் கூட்டம் கூட்டமாக தரு மபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். அவ் வாறு இடம்பெயரும் யானைகள், பல்வேறு கூட்டங்களாக பிரிந்து &nbsp;வனப்பகுதியில் உள்ள நீரோடை கள், வனத்துறையின் சார்பில் &nbsp;அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் குடித்து வந்தன. நடப் பாண்டில், கோடைக்காலம் தொடங் கும் முன்பே ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளதால், நீர்நி லைகள் வறண்டு காணப்படுகின் றன. இதனால், தண்ணீர் தேடி வனப் பகுதியில் இருந்து இரவு நேரங்க ளில் வெளியேறி, குடியிருப்பு பகு திக்குள் நுழையும் யானைகளை, வனத்துறையினர் விரட்டும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீர் மற்றும் தண்ணீா் தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் தேடி சாலையை கடந்து யானை கள் செல்லும்போது, இரவு நேரங் களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஒளி, ஒலி எழுப்புவதால் அவை மிரண்டு வாகனத்தை தாக்க முயல்கின்றன. ஒகேனக்கல் வனச்சரகத்திற்குட் பட்ட சின்னாறு, ராசிகுட்டை, வழுக் கல் கோடு, கோவில்பள்ளம் உள் ளிட்ட பகுதிகளில் யானை நடமாட் டம் அதிகளவில் உள்ளதால், அப் பகுதியில் வனத்துறை சார்பில் &nbsp;10க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டி கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளை முறையாக பராமரிக் காததால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அவ் வப்போது கிராமப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாக உள் ளது. எனவே, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்கு களுக்கான தண்ணீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியே றாத வகையில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வனச்சரக அலு வலர் சிவகுமார் கூறுகையில், கோடைக்காலத்திற்கு முன்பே &nbsp;வறட்சி நிலவுவதால், வனப்பகுதி களில் அமைக்கப்பட்டுள்ள தண் ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. ஒரு சில தொட்டிக ளுக்கு வாகனத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால், அந்த தொட்டிகளுக்கு மாற்று வழி யில் நீர் நிரப்பும் பணி மேற்கொள் ளப்படுகிறது. கிராமப் பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க தலா ஐந்து பேர் கொண்ட குழு &nbsp;என 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பென்னாக ரம் வனப்பகுதியில் யானைகள் நட மாட்டம் உள்ள இடங்களை கண்ட றிந்து, அப்பகுதியில் இரண்டு தண் ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு, நீர் நிரப்பும் பணி நடைபெற்று வரு கிறது, என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.