முந்தய பக்கம்

கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

20 Feb 2026, 2:39 pm
கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
<p><strong>கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, பிப். 20- பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை யில் உள்ள வேப்பிலை அள்ளி கிராம சாலையை சீர மைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென் னாகரம் வட்டம் பாப்பாரப் பட்டி அருகே உள்ள &nbsp;வேப்பிலை அள்ளி கிராமத்த்துக்கு செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டு பல &nbsp;ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. &nbsp;பாப்பாரப்பட்டியிலிருந்து மோர் வள்ளி &nbsp;வழியாக வேப்பிலை அள்ளி நலப்பநாயக் கன அள்ளி, மலையூர் அடிவாரம் ஆகிய பகுதி களை இணைக்கும் ஊரக சாலையாக உள்ள &nbsp;இந்த தார் சாலை இரண்டு கிமீ தூரத்துக்கு &nbsp;ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண்சாலை போல் &nbsp;மாறிவிட்டது. பழுதடைந்த இந்த சாலையை &nbsp;தார் சாலையாக புதுப்பிக்க வேண்டும் என்கிற &nbsp;கோரிக்கையை இப்பகுதியினர் வலியுறுத்து கின்றனர். &nbsp;இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகை யில், கிராமத்திலிருந்து செல்லும் பள்ளி, கல் லூரி வாகனங்கள், &nbsp;விவசாய தேவைக்கான &nbsp;வாகனங்கள், செங்கல் சூளை வாகனங்கள், &nbsp;கார், டூவீலர் மற்றும் கட்டுமானப்பொருட்கள் &nbsp;ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை &nbsp;சென்று வர முடியாமல் இப்பகுதி மக்கள் மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த &nbsp;தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram