தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

28 Nov 2025, 2:28 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நீர்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, நவ.28- எரப்பைனஅள்ளி கிராமத்திலுள்ள பழுதடைந்த மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட எரப்பைனஅள்ளி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்ற னர். இப்பள்ளி வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், பள்ளி குழந்தைகள் பயன்பாட்டிற்கும் நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அதன் சிமெண்ட் கற்கள் பெயர்ந்து, பழுதாகி காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ளதால் பள்ளி குழந்தைகள் விளையாடும் போது அவர்கள் மீது  விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு, புதியதாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு நாமக்கல், நவ.28- தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சுமார் 300 பேருக்கு, தலைக்கவசம் அணிய வேண் டிய அவசியம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு வகுப்புகளை எடுத்தனர். திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே, மாணவிகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் தலைக்கவசம் அணியாமல் வருவதை நகர  காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி கவனித்தார். இதனை யடுத்து, போக்குவரத்து காவல்துறை உதவியுடன் அந்தப் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. தலைக் கவசம் இல்லாமல் வந்த சுமார் 300 இருசக்கர வாகன ஓட்டி களை மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைத்து, நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி விழிப்பு ணர்வு உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து வாகன ஓட்டி கள் அனைவரும், இனிமேல் தவறாமல் தலைக்கவசம் அணி வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஈரோட்டில் இன்று மின்தடை ஈரோடு, நவ.28- ஈரோடு மற்றும் கவுந்தபாடி துணை மின் நிலையங்களுக் குட்பட்ட பகுதிகளில் சனியன்று (இன்று) மின் விநியோ கம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கவுந்தபாடி ஆகிய துணை மின் நிலையங்க ளில் சனியன்று (இன்று) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெறவுள்ளது. இதனால் ஈரோடு துணை மின் நிலையத்திற்குட் பட்ட ஈரோடு நகரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கில் தோட்டம், பெரிய சேமூர், ராம் நகர், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல் பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சத்தி சாலை, கேஎன்கே சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை  மற்றும் மேட்டூா் சாலை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சனி யன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநி யோகம் இருக்காது. இதேபோன்று, கவுந்தப்பாடி துணை மின் நிலையத்திற் குட்பட்ட கவுந்தப்பாடி, ஓடத்துறை, கொளத்துப்பாளையம், பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ் ணாபுரம், தர்மாபுரி, கே.புதூர், மாரப்பம்பாளையம், அய்யம் பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளை யம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓட மேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, சேவாக வுண்டனூர், ஆலத்தூர், கவுண்டம்பாளையம், குட்டிபாளை யம் மற்றும் செரயாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனி யன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் வீணாகும் வைக்கோல்! ஈரோடு, நவ.28- நெல் அறுவடை செய்யப்பட்டு வயல்களில் வைக்கப் பட்டிருந்த வைக்கோல் மழையால் வீணாகும் நிலை ஏற் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் வாய்க்கால் பாசனப்  பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயி கள் நெல் சாகுபடி செய்திருந்தனர். கடந்த 10 நாட்களாக, அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இதன்பின் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல் அங் கேயே போடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு பெய்த மழையால், வைக்கோல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. நெல் சாகுபடி பாதிக்கப்பட் டுள்ள நிலையில், கால்நடைகளுக்கான வைக்கோல் மழை யில் நனைந்து வீணாகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. எஞ்சியுள்ள வைக்கோலை மட்டும், விவசாயிகள் தங்களது வயல்களில் உலர வைத்து வருகின்றனர்.

வரட்டாறு அணை நிரம்பியது: மக்களுக்கு எச்சரிக்கை

தருமபுரி, நவ.28- வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம் பிய நிலையில், வரட்டாறு கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளி மதுரையில் அமைந்துள்ள வரட்டாறு அணை யின் மொத்தம் நீர்ப்பிடிப்பு உயரம் 34.45 அடி யாகும். கடந்த சில தினங்களாக சித்தேரி மலைப்பகுதிக்குட்பட்ட சூரியக்கடை, சித் தேரி, அரசநத்தம், கலசப்பாடி, நொச்சிக் குட்டை, வேலாம்பள்ளி, தோல்தூக்கி உள் ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இத னால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து உபரிநீர் வரட்டாறு வழி யாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இத னால் வள்ளிமதுரை, தாதராவலசை, கீரைப் பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம் பட்டி, அரூர் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் வரட்டாறு கரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சித்தேரி மலைப்பகுதியில் இரவு நேரங்களில் கனமழை பெய்தால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால்  பொதுமக்கள் ஆற்றைக்கடந்து செல்லுதல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், ஆற்றில் குளிப்பது மற்றும் துணிகளை துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிப்பு ரூ.28 கோடி தமிழக அரசு நிதி வழங்கக்கோரி தீர்மானம்

உதகை, நவ.28- குன்னூர் நகராட்சி பகுதியில் வளர்ச் சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு ரூ.28 கோடி நிதி வழங்கக்கோரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நக ராட்சியின் மாதாந்திர கூட்டம் நகர் மன்றத் தலைவர் சுசீலா, துணைத்தலை வர் வாசிம் ராஜா, ஆணையாளர் இளம் பரிதி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி களை நியமன உறுப்பினர்களாக நிய மிப்பதற்கான சட்டத்திருத்த மசோ தாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது வரவேற்புக்குரியதாக கூறி முதல்வ ருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, குன்னூர் நகராட்சியில் புதிதாக நிய மிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் கணேசனுக்கு தலைவர், துணைத்தலைவர் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரி வித்தனர். இதன்பின் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள், மழைக்காலம் துவங் கிய நிலையில் 30 வார்டுகளிலும் தெரு விளக்குகள், நடைபாதைகள் மற் றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். தற்போது எஸ்ஐஆர் படிவங் கள் நிரப்புவதில் அதிகாரிகளிடையே பல குழப்பங்கள் நீடித்து வருவதால், டிச.4 ஆம் தேதி வரை வழங்கியிருந்த கால அவகாசத்தை நீட்டித்து கூடுத லான கால அவகாசம் வழங்க வேண் டும், என்றனர். மேலும், குன்னூர் நகராட்சியில் நடந்து முடிந்த உங்களுடன் ஸ்டாலின்  திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 30 வார்டுகளிலும் தடுப்புச்சுவர்கள் நடை பாதைகள் கழிவு நீர் கால்வாய்கள் உட்பட பல்வேறு அடிப்படை தேவை களை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.28  கோடி வரை வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி தேவைப்படுவதால் அதனை தமி ழக அரசு உடனடியாக வழங்க வேண் டும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.