தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தில் உணவுத்தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

4 Mar 2026, 5:01 pm
தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தில் உணவுத்தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்
<p><strong>தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தில் உணவுத்தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்</strong></p> <p>உடுமலை, மார்ச் 4- உடுமலை நகராட்சியில் வேலை செய்யும் &nbsp;தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் &nbsp;காலை உணவை தரமானதாக வழங்கப்படு கிறதா? என்பதை உரிய அலுவலர்கள் ஆய்வு &nbsp;செய்ய வேண்டும் என உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். உடுமலை நகராட்சி 31ஆவது நகர்மன்ற &nbsp;கூட்டம் நகராட்சித் தலைவர் மத்தீன் தலைமை யில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் &nbsp;சுதந்திர போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு &nbsp;மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் பேசுகையில், தேர் தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த எதிர்கட்சிகள் முயற்சி &nbsp;செய்வதை அறிந்து, மூன்று மாதங்களுக் கான உரிமை தொகையுடன் கோடைகால சிறப்புத்தொகை என ரூ.5 ஆயிரம் ஒரே &nbsp;தவணையாக பயனாளிகளின் வங்கிக் கணக் கில் செலுத்தப்பட்டுள்ளது. மகளிரும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்க நட வடிக்கை எடுத்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும், நகரில் பொதுமக்கள் பயன்பெ றும் வகையில், அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வடிகால் வசதி, மற்றும் தார் சாலை &nbsp;அமைக்கும் பணிகளை செய்ய வேண்டும், தற்போது ஒரு சில பகுதிகளில் மட்டுமே இப்ப ணிகள் நடைபெறுகிறது. அனைத்து பகுதிக ளிலும் முறையாக இப்பணிகளை செய்ய வேண்டும். &nbsp;கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த தளி சாலையில் விதிமீறல் கட் டிடங்களை அகற்ற அலுவலர்கள் எவ்வித &nbsp;நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்ய வில்லை. அப்பணிகளை அலுவலர்கள் விரைந்து ஆய்வு செய்து, விதிமீறி கட்டப்பட்ட &nbsp;கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி அகற்ற &nbsp;வேண்டும். &nbsp;நகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வாகனம் செல்ல முடி யாத பகுதிகளுக்கு, புதிதாக சிறிய வாகனங் களை வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர &nbsp;வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு &nbsp;காலை உணவுத்திட்டம் தற்போது செயல்ப டுத்தப்பட்டு வரும் நிலையில், அப் பணிகளை &nbsp;அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா? காலை &nbsp;உணவை பணியாளர்கள் யாரும் சாப்பிட &nbsp;முடியாத நிலையில் உணவு வழங்கப்படுகி றது. அதனால், பணியார்கள் நல்ல உணவு &nbsp;வேண்டும் என்கின்றனர். எனவே அவர்க ளுக்கு தரமான காலை உணவு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். &nbsp;நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கட் டப்பட்ட ஐஎம்ஏ (IMA) அரங்கம் விதிகளை &nbsp;மீறி வணிக நோக்கில் செயல்படுகிறது. உடன டியாக அதை நகராட்சி கையகப்படுத்த வேண்டும். உடுமலை எஸ்என்ஆர், நகரில் உள்ள பூங்காவை பராமரிப்பு செய்து உடன டியாக பொதுமக்கள், சிறுவர்கள் பயன்பெ றும் &nbsp;வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தினர். நிறைவாக கூட்டத்தில் 115 தீர்மா னங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.