திருப்பூரில் 33 ஆண்டுகளுக்கு முன் பெற்ற பட்டா விபரம் தாமதிக்காமல் கணினியில் பதிவு செய்ய வலியுறுத்தல்
29 Dec 2025, 6:22 pm
<p><strong>திருப்பூரில் 33 ஆண்டுகளுக்கு முன் பெற்ற பட்டா விபரம் தாமதிக்காமல் கணினியில் பதிவு செய்ய வலியுறுத்தல்</strong></p>
<p>திருப்பூர், டிச.29 - திருப்பூர் அங்கேரிபாளையத்தில் பட்டா மற்றும் பெயர், பட்டா எண் போன்ற விவரங் கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படா மல் உள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட் டம் திங்களன்று ஆட்சியர் மனிஷ் நாரண வரே தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசிகவுண்டம்பா ளையம் கிளைச் செயலாளர் மனோகரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, செட்டி பாளையம் அங்கேரிபாளையம் கிழக்கு வீதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்டோருக்கு 1992 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை பட்டா மற்றும் பெயர், பட்டா எண் போன்ற விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதுகு றித்து பலமுறை விண்ணப்பித்தும் பதி வேற்றம் செய்யப்படவில்லை. இது தொடர் பாக உரிய நடவடிக்கை எடுத்து, கணினி யில் பட்டா பெயர் விவரங்களை பதிவேற்றம் செய்துதர வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. இதில், கட்சியின் வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன், ஆர்.என். ரத்தினசாமி, சேகர் உள்ளிட்ட கட்சி அணியி னர் பங்கேற்றனர். உகாயனூர் ஊராட்சி பல்லவராயன்பா ளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தங்கள் ஊரில் காங்கீரிட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை தொடங் குவதற்கு மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரி யம், வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறைக ளிடம் தடையின்மை சான்று வாங்குவதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த தொழிற் சாலை அமைந்தால், 2 கி.மீ., சுற்றளவுக்கு விவசாயம் பாதிக்கப்படும். தொழிற்சாலை யில் இருந்துவெளியேறும் தூசியால் குடியி ருப்புவாசிகளும், சுவாசம் சார்ந்த பிரச்சினை களுக்கு ஆளாக நேரிடும். நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டால் விவசாயம் அழிந்து விடும். எனவே காங்கீரிட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மாவட்ட ஆட்சியர் அனு மதி தரக்கூடாது என கூறப்பட்டுள்ளது. குன்னத்தூர் பகுதியில் மதுபானக்கூடம் அமைந்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப டும். எனவே புதிய மதுபானக்கூடம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வி என்பவர் அளித்த மனுவில், தனது மகன் பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்விக் காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கல்வி கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் அதே ஆண்டு பார்த்திபன் விபத்தில் இறந்துவிட் டார். கூலி வேலை செய்து வரும் தன்னால் கல்வி கடனை செலுத்த முடியாத நிலையில், அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் கடந்த டிச.7 ஆம் தேதி தனியார் ரியல் எஸ் டேட் நிறுவனம், 150 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனைகளை அமைத்து விற்பனை செய்தது. மேலும் வீட்டுமனைகளை பதிவு செய்பவர் களுக்கு ஹெலிகாப்டரில் சவாரி அழைத்து செல்வதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பி 200 க்கும் மேற்பட்டோர் வீட்டு மனை வாங்குவதற்கு முன்பணம் செலுத்தி னர். ஆனால் பலரை ஹெலிகாப்டரில் அழைத்து செல்லாமல் தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளது. மேலும் அந்த நிலத் தில் வீடு கட்டுவதற்கான அரசின் அனுமதி உள் ளிட்டவை பெறப்படவில்லை. அந்த இடத் தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லா மல் வீட்டுமனைகள் முறைகேடாக விற்கப்ப டுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதப்பூர் பகுதி மக்கள் கோரியுள்ள னர்.</p>
