கிராமத்திற்குள் யானைகள் நுழைவதை தடுக்க வலியுறுத்தல்
15 Feb 2026, 3:03 pm
<p><strong>கிராமத்திற்குள் யானைகள் நுழைவதை தடுக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, பிப்.15- விளைநிலங்கள் மற்றும் கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழை வதை தடுக்கும் விதமாக, 15 கி.மீ தொலைவிற்கு சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் வனப்பகுதிகளை ஒட்டி யுள்ள மடம், கூத்தப்பாடி, கே.குள்ளாத் திரம்பட்டி, பூதிப்பட்டி, கொட்டதுண்டு காடு உள்ளிட்ட பகுதிகளில் இடையே 20க்கும் மேற்பட்ட இடங்களில் யானை கள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஜன.18 ஆம் தேதி கே.குள்ளாத்திரம்பட்டியில் விவசாய நிலத்தில் காவலில் இருந்து விவசாயி யானை தாக்கி உயிரிழந்தார். இதை யடுத்து அப்பகுதியைச்சுற்றி யானை கள் வனப்பகுதியை விட்டு வெளியேறா மால் இருக்க, 15 கி.மீ., தொலைவிற்கு சோலார் மின்வேலி அமைக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் பென்னாக ரம் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத் தரவின் பேரில், வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பென் னாகரம் வனச் சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையில் விழிப்புணர்வு வழங்கி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி வருகின்றனர். அதன்படி, வெள்ளியன்று கூத்தப்பாடியில் பொது மக்களிடையே காட்டுத்தீ பரவுவதை தடுப்பது குறித்தும், யானைகள் வனப் பகுதிகளை விட்டு வெளியேறுவது பற்றி பொதுமக்களிடையே எடுத் துரைத்தனர். அப்போது, ஒரு கி.மீ., தொலைவிற்கு சோலார் மின் வேலி அமைக்க உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு அப்பகுதி மக்கள் மேலும் உள்ள பகுதிகளுக்கும் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.</p>
<p> </p>
