ஓய்வூதிய திருத்தச் சட்டம் 2025-ஐ திரும்ப பெற வலியுறுத்தல்
13 Feb 2026, 5:58 pm
<p><strong>ஓய்வூதிய திருத்தச் சட்டம் 2025-ஐ திரும்ப பெற வலியுறுத்தல்</strong></p>
<p>ஓய்வூதிய திருத்தச் சட்டம் -2025-ஐ திரும்ப பெற வேண்டும். 8 ஆவது ஊதியக்குழு பணிக்குறிப்பில் ஓய்வூதியர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று சென்னையில் ஓய்வூதியர் சங்கங்களின் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது மேடையின் தலைவர் டி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், தொமுச தலைவர் கி.நடராஜன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பன்னீர்செல்வம் (ஐஎன்டியுசி), எம்.சுப்பிரமணி (எச்எம்எஸ்), எஸ்.டானியல் ஜெயசிங் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசேகர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.</p>
<p> </p>
