ரயில்வே சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வலியுறுத்தல்
2 Dec 2025, 4:11 pm
<p><strong>ரயில்வே சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வலியுறுத்தல்</strong></p>
<p>- ஜி.லெனின் - தருமபுரி, டிச.2- தருமபுரி ஆட்சியர் அலுவல கம் பின்புறம் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை, பேருந்து செல் லும் அளவிற்கு விரிவுபடுத்த வேண் டும் என வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரியில் சேலம் - பெங்க ளூரூ தேசிய நெடுஞ்சாலையோ ரம், சோகத்தூர் பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக் கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலை யம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், சேலத்திலிருந்து தருமபுரி வரும் புறநகர் பேருந்துகள் நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, ஓட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழி யாக நகரப் பகுதிக்கு வராமல், நல் லம்பள்ளி புறவழிச்சாலை வழி யாக பேருந்து நிலையத்திற்கு சென்று வரும் வகையில் போக்கு வரத்தில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட் டால், தருமபுரி நகரம் மற்றும் விரி வாக்கப் பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட 50க்கும் மேற்பட்ட முக் கிய அலுவலகங்கள், அரசு கலைக் கல்லூரி ஆகியவை செயல்படும் பகுதிக்கு தினமும் வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கானோர், நல் லம்பள்ளி புறவழிச்சாலையில் புற நகர் பேருந்துகளிலிருந்து இறங்கி, நகர பேருந்துகள் மூலமாக பய ணம் செய்யும் நிலை ஏற்படும். இதற்கு தீர்வு காண தடங்கம் பகுதி யில் புறவழிச்சாலையில் இருந்து தருமபுரி புதிய ஆட்சியர் அலுவல கம் அருகே தருமபுரி - சேலம் சாலை யுடன் இணையும் 2 கி.மீ., நீளம் கொண்ட இணைப்பு சாலையை நகர பேருந்துகள் சென்று வரும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப் பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், தருமபுரி நகரம் மற்றும் சேலம் சாலையில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிச லுக்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரு புறவழிச்சாலையில் புறநகர் பேருந்து நிலையம் அமைப் பது வரவேற்கத்தக்கது. அதேநே ரத்தில், புறவழிச்சாலையில் செல் லும் பேருந்துகளில் இருந்து இறங்கி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், இலக்கியம்பட்டி உள்பட நக ரின் முக்கிய பகுதிகளுக்கு பொது மக்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள் எளிதாக வந்து செல்ல தடங்கம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பயன் பாட்டில் உள்ள இணைப்பு தார்ச்சா லையை பேருந்துகள் சென்று வரும் வகையில் விரிவுபடுத்த வேண் டும். இதற்கு வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்ப குதி அருகே உள்ள ரயில்வே சுரங் கப்பாதையை பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சென்று வரும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் 5 நிமிடம் முதல் 10 நிமிட வாகனப் பயணத்தில் தடங்கம் பகுதியிலுள்ள புறவழிச் சாலையில் இருந்து ஆட்சியர் அலு வலகம் அருகே சேலம்- தருமபுரி பிர தான சாலைக்கு வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். இதற்கான நடவ டிக்கையை விரைவாக தொடங்க வேண்டும், என்றனர்.</p>
