முந்தய பக்கம்

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்

25 Nov 2025, 3:29 pm
ஆரம்ப சுகாதார நிலையத்தை  தரம் உயர்த்த வலியுறுத்தல்
<p><strong>ஆரம்ப சுகாதார நிலையத்தை &nbsp;தரம் உயர்த்த வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, நவ.25- பொ.மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திப்பி ரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, வே.முத்தம்பட்டி, கோடுஅள்ளி, பி.துறிஞ்சிப்படடி, பி.பள்ளிப்பட்டி, ரேகட அள்ளி, ராமமூர்த்தி நகர், வீராச்சியூர் உள்ளிட்ட கிரா மங்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் இந்த &nbsp;மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதி யில் மலைபாங்கான கிராமங்கள் உள்ளன. மேல் சிகிச்சை என்றால் தருமபுரி அரசு மருத்துவமனை அல்லது &nbsp;சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். &nbsp;பாம்புகடி உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சைகளை இந்த மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும். மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாகவும், கூடுதல் படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகா தார நிலையமாக மாற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram