தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழங்குடி மக்கள் விரோதப் போக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

14 Feb 2026, 4:33 pm
பழங்குடி மக்கள் விரோதப் போக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
<p><strong>பழங்குடி மக்கள் விரோதப் போக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, பிப். 14- பழங்குடியின மக்களை அவ மதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் மீது விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் பொதுத் துறைச் செயலாளரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநிலப் பொதுச் செய லாளர் ஆ. பொன்னுசாமி ஆகியோர் அளித்துள்ள அந்த மனுவில், &ldquo;திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. &nbsp;பிரதாப், ஐ.ஏ.எஸ் அவர்களின் செயல் பாடுகள் குறித்து கடும் புகார்கள் தெரி விக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 14 அன்று தொடுகாடு கிராமத்தில் நடை பெற்ற &lsquo;சமத்துவப் பொங்கல்&rsquo; விழா வில், அக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை அழைக்காமல், வெளியூர் ஆட்களை வைத்து மாவட்ட நிர்வாகம் நிகழ்ச்சியை நடத் தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசு கட்டிக் கொடுத்த &nbsp;வீடுகளைப் பயனாளிகளிடம் முறை யாக ஒப்படைக்காமல், தனியார் நிறுவன நிர்வாகிகளைக் கொண்டு திறப்பு விழா நடத்தியதும், பழங்குடி மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் செல்லாமல் ஆட்சியர் தீண்டாமைப் போக்கைக் கடைப்பிடித்ததும் அந்த மக்களைப் புண்படுத்தியுள்ளதாக&rdquo; குறிப்பிடப்பட்டுள்ளது. &nbsp;இத்தகையப் போக்குகளைக் கண்டித்து பிப்ரவரி 6 அன்று போராட முயன்ற 300-க்கும் மேற்பட்ட பழங்குடியினரை காவல்துறை மூலம் &nbsp;கைது செய்துள்ளதையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பழங்குடி மக்களுக்கு &nbsp;எதிரான இத்தகைய நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் மாவட்ட ஆட்சி யர் மீது உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விடுபட்ட வீடுகளை விரைந்து, கௌ ரவமான முறையில் பழங்குடி மக்களி டம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் &nbsp;வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.