மின்கம்பங்களை சரி செய்ய வலியுறுத்தல்
2 Feb 2026, 4:51 pm
<p><strong>மின்கம்பங்களை சரி செய்ய வலியுறுத்தல்</strong></p>
<p>உடுமலை, பிப்.2- பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக் கும் மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் உடுமலை ஒன்றி யச் செயலாளர் கருப்புசாமி, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப் பிய புகாரில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டம், உடுமலை ஊராட்சி ஒன்றி யம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இட மாகவும், ஊராட்சி அதிகாரிகள் தினமும் வரும் இடமான ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள தெரு விளக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பழுதடைந்து காணப்படு கிறது. இந்த மின் விளக்கால் பெரிய விபத்து ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த மாதம் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட இடத்தை ஊராட்சி அதிகாரிகள் பார்க்கக்கூட இல்லை. ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பே இப்படி இருக்கும் போது, மற்ற பகுதியில் மக்களின் அடிப்படை வசதி களை அதிகாரிகள் எப்படி செய்வார்கள் என்று கேள்வி எழு கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.</p>
