அணைப்பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>அணைப்பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, பிப்.18- வள்ளிமதுரை வரட்டாறு அணை பூங்கா பராமரிப்பின்றி சிதிலமடைந்து பூட்டியிருக் கும் அவல நிலையை போக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே வள்ளி மதுரையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட் டில், சித்தேரி மலை அடிவாரத்தில் அமைந்த வள்ளிமதுரை அணைக்கு அருகே பூங்கா வளாகம் உள்ளது. இந்த பூங்கா சில ஆண்டு காலம் பராமரிப்பு இல்லாமல் மது அருந்து பவர்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்களுக்கான இடமாகவும் மாறியுள் ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்பி செல்கின்றனர். பல ஆண்டு களாக இப்பூங்காவை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பூங்கா விலுள்ள உள்ள இரும்புப் பொருட்கள் துருப் பிடித்து, சிலைகள் உடைந்து காணப்படு கிறது. அரூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அழகிய இயற்கை சூழலுடன் உள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம் அமைத்தால் சுற் றுலா மேம்பாடு கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும். எனவே, பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் பூங்காவை மாவட்ட நிர்வா கம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.</p>
