சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தற்போதைய சட்டமன்றத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தல்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தற்போதைய சட்டமன்றத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தல்</strong></p>
<p>தூத்துக்குடி, டிச.17 - சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுவது குறித்து நீதிபதி கே.என். பாஷா ஆணையம் ஒரு மாதத்திற்குள் பரிந்துரையை வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், தற்போதைய சட்டமன்ற ஆயுட்காலத்திற் குள்ளேயே சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி வலியுறுத்தினார். ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு அரசு, சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் கொண்டு வரும் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்று, அதற்கான பரிந்துரைகளை வழங்க நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. இக்குழுவிற்கு ஆலோ சனைகளை வழங்குவதற்கான தலித், சமூக நீதி, ஜனநாயக மற்றும் இடதுசாரி அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் டிசம்பர் 16 (செவ்வாய்) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி. சுகந்தி தலைமை தாங்கி னார். முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன் விவாதத்திற் கான முன்மொழிவை அறிமுகம் செய்து வைத்தார். சட்டத்தின் அவசியம் இது தொடர்பாகச் செய்தியாளர் களிடம் பேசிய பி.சுகந்தி, சாதி ஒழிப்பில் சாதி மறுப்புத் திருமணங்கள் முக்கியப் பங்காற்றுவதாக டாக்டர் அம்பேத்கர் வலி யுறுத்தியதைச் சுட்டிக்காட்டினார். உலக மனித உரிமைப் பிரகடனம் மற்றும் இந்திய அரசமைப்புச் சாசனப் பிரிவுகள் 14, 19, 21 ஆகியன இணையர்களின் தெரிவு சுதந்திரத்தை அங்கீகரிக்கின்றன. 1955 இந்து திருமணச் சட்டமும் சாதி கடந்த திருமணங்களைச் சட்டப்பூர்வ உரிமையாக அறிவித்துள்ளது. இருப்பினும், சாதித் தூய்மை, சொத்துரிமை மற்றும் பெண்களின் பாலியல் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சமூக உளவியல் காரணமாகச் சாதி மறுப்புத் திருமணங்கள் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன. தம்பதியினர் படுகொலை செய்யப்படுவதும், பல ஆண்டுகள் கழித்தும் கூட வன்மத்துடன் தாக்கப்படுவ தும் தொடர்கிறது. தற்போதுள்ள கிரி மினல் சட்டங்கள் இதனைத் தடுக்கப் போதுமானதாக இல்லை என்பதே கள யதார்த்தம் என்றும் அவர் கூறினார். முக்கியத் தரவுகள் மற்றும் கோரிக்கைகள் 2012-லேயே இந்தியச் சட்ட ஆணை யம் (அறிக்கை எண் 242) சிறப்புச் சட்டம் வேண்டுமென்று பரிந்துரைத்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஒன்றிய அரசோ, மாநில அரசுகளோ இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2015-இல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலை வர் அ. சவுந்தரராசன் இது தொடர்பாகத் தனிநபர் சட்ட வரைவைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்தும் அது நிறைவேற வில்லை. தேசிய குற்றப் பதிவு ஆவணம் (NCRB) போன்ற அமைப்புகள் ஆணவக் கொலைகளுக்கான தரவுகளைத் தனி யாகத் தொகுப்பதில்லை என்பதால், இந்தத் தகவல்கள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. எனவே, சாதி ஆணவக் குற்றங்கள், இணையர் தெரிவு சுதந்திரம், பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் விரை வான நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பி.சுகந்தி வலியுறுத்தினார். ஆணையத்திற்கு வலியுறுத்தல் இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த செயல்பாட்டா ளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, விரைவில் நீதிபதி கே.என். பாஷா ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். ஆணையத்திற்குத் தரப்பட்டுள்ள 3 மாத கால அவகாசத் தைக் குறைத்து, ஒரு மாதத்திற்குள் அறிக் கையைப் பெற்று, தற்போதைய சட்ட மன்றத் தொடரிலேயே இதனைச் சட்ட மாக்க அரசு முன்வர வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொண்டது.</p>
