முந்தய பக்கம்

விவசாயிகளின் நிலங்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

20 Jan 2026, 2:46 pm
விவசாயிகளின் நிலங்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
<p><strong>விவசாயிகளின் நிலங்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்</strong></p> <p>சேலம், ஜன.20- விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங் களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேளாண் நிலங்களை கார்ப்பரேட் பெருத் திட்டங்க ளுக்காக கையகப்படுத்தக் கூடாது. அத்திப்பட்டி சூரியூர் ஏழை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 1400 &nbsp;ஏக்கர் வேளாண் நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் சேலம் மாவட்டம், பனமரத்துப் பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram