திடக்கழிவு மேலாண்மை பிரச்சனைக்கு அறிவியல் பூர்வமான தீர்வு காண வலியுறுத்தல்
12 Jan 2026, 6:20 pm
<p><strong>திடக்கழிவு மேலாண்மை பிரச்சனைக்கு அறிவியல் பூர்வமான தீர்வு காண வலியுறுத்தல்</strong></p>
<p>திருப்பூர், ஜன.12- திருப்பூர் மாநகரில் தற்போது நிலவி வரும் திடக்கழிவு மேலாண்மை பிரச்ச னைக்கு அறிவியல் பூர்வமான தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அறிவி யல் இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 8 ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு ஞாயி றன்று வெள்ளியங்காட்டில் நடைபெற் றது. மாவட்டத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அறிவியலை அறிவோம், அறிவியலால் இணைவோம் என்ற தலைப்பில் மாநி லச் செயலாளர் வி.ராமமூர்த்தி கருத்து ரையாற்றினார். இதில், அறிவியல் இயக்கத்தோடு பயணித்த, உறுதுணை யாக இருந்த பள்ளிகள் மற்றும் புரவலர் களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. மேலும், நினைவுப் பரிசுகள் வழங் கப்பட்டன. மாநில துணைத்தலைவர் மஹபுநிஷா நிறைவுறையாற்றினார். இதில், திருப்பூர் மாநகரில் தற்போது நிலவி வரும் திடக்கழிவு மேலாண்மை பிரச்சனைக்கு அறிவியல்பூர்வமான தீர்வை மாநகராட்சி நிர்வாகம் அமல்ப டுத்துவதற்கு முன் வர வேண்டும். அனைத்து நுண் உரமாக்கல் மையங் களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளைப் பிரித்து வாங்குவதை மக்களிடம் பழக் கப்படுத்த வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவியல் உபகரணங்களை கொண்ட ஸ்டெம் பூங்காவும், அருங் காட்சியகத்தையும் அமைத்து திருப்பூர் மக்களிடம் அறிவியல் மனப்பான் மையை வளர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள்: இதில், மாவட்டத் தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலா ளராக திலக், மாவட்ட பொருளாளராக ராணி உள்ளிட்ட 91 பொதுக்குழு உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாநாட்டின் நிறைவாக அறிவி யல் கலை மாலை நடைபெற்றது. மாநில கருத்தாளர் வீரையா பங்கேற்ற மந்தி ரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பள்ளி மாணவர்களின் நாடகம், நடனம், சிலம்பம் மற்றும் யோக கலை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.</p>
<p> </p>
