தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

25 Nov 2025, 3:29 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அரசு பேருந்து வழித்தடத்தை நீட்டிக்க வலியுறுத்தல்

தருமபுரி, நவ.25- பென்னாகரம் மற்றும் தருமபுரி பேருந்து பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் வழித்தடத்தை பவளந்தூர் கிராமப் பகுதி வரை நீட்டிப்பு செய்ய வேண் டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் அருகே உள்ள வட்டுவன ஹள்ளி ஊராட்சி, பவளந்தூர் பகுதி யில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இப்பகுதிக்கு தரும புரி போக்குவரத்து கிளை பணிமனை யில் இருந்து எண் 4 என்ற நகரப் பேருந்து, தருமபுரியிலிருந்து பாப் பாரப்பட்டி, திகிலோடு, ஆலமரத்துப் பட்டி, மருக்காரம்பட்டி வழியாக பவ ளந்தூர் கூட்ரோடு பகுதியில் நிறுத் தம் செய்யப்படுகிறது. இதேபோல் பென்னாகரம் போக்குவரத்து கிளை  பணிமனையில் இருந்து இயக்கப் படும் அரசு நகரப் பேருந்துகள் எண் 1 மற்றும் 26 சி, ஆகியவையும் பவ ளந்தூர் கூட்ரோடு பகுதி வரை மட் டுமே இயக்கப்படுகிறது. இந்நிலை யில், பவளந்தூர், கவுண்டர்கொட் டாய், விநாயகர் கோவில் கொட்டாய் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதி யைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், விவசாயிகள் தருமபுரி மற்றும் பென் னாகரம் பகுதிக்கு செல்ல சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவளந்தூர் கூட்ரோடு பகு திக்கு வருகின்றனர். சில நேரங்க ளில் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்ல பேருந்துகளை தவறவிடும் நிலை ஏற்படுகிறது. மலைகள் சூழ்ந்த பகுதிகளின் இடையில் பவளந்தூர் கிராமம் அமைந்துள்ளதால், பேருந்து பய ணத்தையே நம்பியுள்ள கிராம மக் கள் அரசுப் பேருந்தின் வழித்தடத்தை பவளந்தூர் கிராமப் பகுதிக்குள் நீட் டிப்பு செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பென்னாகரம் மற் றும் தருமபுரி போக்குவரத்து கிளை பணிமனைகளில் இருந்து வெவ் வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் மூன்று அரசு நகரப் பேருந்துகளின் சேவையினை பவளந்தூர் கிராமப் பகுதிக்குள் நுழைந்து செல்ல  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மான் உயிரிழப்பு சேலம், நவ.25- சேலம், வாழப்பாடியை அடுத்த கோதுமலை வனப் பகுதியிலிருந்து திங்களன்று 2 வயதுடைய ஆண் புள்ளி மான் வழிதவறி வந்தது. துக் கியாம்பாளையம் ஊராட்சி, மாரியம்மன்புதூர் மேலக் காடு கிராமத்தில் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது நாய்கள் கடித்த தில் அந்த புள்ளிமான் உயிரி ழந்தது. இதுகுறித்த தகவ லின் பேரில், வனத்துறையி னர் மானின் உடலை பிரே தப் பரிசோதனை செய்து புதைத்தனர்.

வாணியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தருமபுரி, நவ.25- வாணியாறு அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள வாணியாறு அணையிலி ருந்து தற்போது உபரிநீர் திறந்து விடப்பட் டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரத்தில், வெங்கடாசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பகு தியில் உள்ள வாணியாற்றின் பாலம் அருகே பாப்பிரெட்டிப்பட்டி மில்லில் இருந்து, பொம் மிடி சாலை வரை பொதுமக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை விடுத்து தட்டிகள் (பிளக்ஸ் பேனர்) வைக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் உமா ஆகியோர், ஆற்றங்கரை யோரம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பார் வையில் படும் படியாக வைத்தனர். பொது மக்கள் குளிக்கவோ, துணிகளை துவைக் கவோ செல்ல வேண்டாம். மேலும், ஆடு, மாடுகளை கரையோர பகுதிக்கு மேய்ச்ச லுக்கு ஓட்டிச்செல்ல வேண்டாம். குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை ஆற்றில் குளிக்க வேண்டாம். பாதுகாப்பாக இருப்பது டன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்றனர்.

ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

நாமக்கல், நவ.25- காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நாட்டான் கவுண்டன் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (80). கணவர் ஜெக நாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  காலமான நிலையில், மூதாட்டி பெரியம்மாள் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் சிறு  சிறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தி வந்த பெரியம்மாள், தினந்தோறும் நாட்டான் கவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் துணி துவைக்க வருவது வழக்கம். இந்நிலையில் செவ்வாயன்று துணி துவைப்பதற்காக காவிரி ஆற்றுக்கு வந்துள் ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பா ததால் அக்கம் பக்கத்தில் உள்ள அவருடைய உறவினர்கள் காவிரி ஆற்றில் வந்து பார்த்த போது அவர் படிக்கட்டு பகுதியில் இருந்து  பத்தடி தூரத்தில் நீரில் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைய டுத்து அவர்கள் போலீசாருக்கு தகவலளித்த னர். அதன்பேரில் அப்பகுதிக்கு வந்த பள்ளி பாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி  பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவிரியில் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், துணி துவைக்கு சென்ற மூதாட்டி, தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தலைமையாசிரியரைக் கண்டித்து வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்!

தருமபுரி, நவ.25- பென்னாகரம் அருகே தரக்குறைவாக பேசிய தலைமையாசிரியர் மீது நடவடிக்கை  எடுக்கக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மோட்டுப்பட்டி, வண்ணாத்திப் பட்டி, மஞ்சநாயகனஅள்ளி, ஆணைக்கல்ல னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகு திகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியராக மாரிமுத்து என்ப வர் உள்ளார். இந்நிலையில், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் தரக்குறைவாக பேசுவதால், அவரை பணியிடம் மாற்றம் செய்யக் கோரி, திங்களன்று 50க்கும் மேற்பட்ட மாண வர்கள் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி யின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர்.  இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் பாபு சுரேஷ் குமார் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது, பள் ளியில் அதிக தேர்ச்சி பெறுவதற்காக ஆசிரி யர்கள் கண்டிப்பதை மாணவர்கள் தவறாக  எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், இதுகு றித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.